இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன்: மோடி வெற்றி உரை
இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்றும், நாட்டைமறுகட்டமைப்பு செய்வேன் என்றும் மோடி தனது வெற்றி உரையில்கூறினார்.

பாஜகவின் வெற்றிக்குப் பின்னர் குஜராத் மாநிலம் வதோதராவில்முதல் உரை ஆற்றிய நரேந்திர மோடி, தேர்தலில் தனிப்பெரும்பான்மைவழங்கிய இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:

"பாஜக முன்னிலை நிலவரங்கள் வெளியான உடனேயே பல்வேறுஊடகவியலாளார்கள் என்னிடம் தேர்தல் வெற்றி குறித்து கருத்துதெரிவிக்குமாறு கேட்டனர்.

ஆனால், வதோதராவில்தான் முதலில் பேச வேண்டும் எனவிரும்பினேன். அதனாலேயே இங்கே உங்கள் முன் பேசுகிறேன்.

வதோதராவில் நான் 50 நிமிடம் மட்டுமே தேர்தல் பிரச்சாரம்செய்தேன். ஆனால், எனக்கு ஆதரவாக பெரும் அளவில்வாக்களித்து, 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்துள்ளீர்கள்.

வதோதரா சகோதர, சகோதரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயக நடைமுறைகளை கருத்தில் கொண்டு மக்கள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர் என்பதை உணர்கிறேன். புதிய சாதனையை படைக்க உதவிய வதோதரா மக்களுக்கு தலைவணங்குகிறேன்.

தேர்தலில் அதிக அளவில் மக்கள் வாக்கு அளித்துள்ளதற்கு தேர்தல் ஆணையத்தை பாராட்டியாக வேண்டும்.

காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சிக்கு முதல் முறையாக இந்திய மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளனர். வலுவான கொள்கைகள் கொண்ட தேசியவாத கட்சிக்கு மக்கள் தனிப் பெரும்பான்மை அளித்துள்ளனர். இதற்காக இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தருணம் தேசத்துக்காக வாழ்ந்து சாதிக்க வேண்டிய தருணம், தேசத்துக்காக உயிர் நீக்கும் தருணம் அல்ல. எனவே, இந்தியதேசத்தில் நல்லாட்சி புரிவேன்.

மத்தியில் அமையவுள்ள அரசு, இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்தமான அரசு. ஒரு தனிப்பட்ட கட்சிக்கோ, ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ சொந்தமானது அல்ல.

இந்த அரசு மக்களால், மக்களுக்காக, மக்களே உருவாக்கிய அரசு.இந்த அரசின் முக்கியத்துவம் நாட்டின் வளர்ச்சியிலேயே இருக்கிறது.நல்ல காலம் கனிந்துவிட்டது. எனது வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் என் தேசப் பணிக்காக அர்ப்பணிக்கிறேன்"என்றார் மோடி.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி