தனியார் பள்ளியில் உயர் கல்வி பெற உதவித்தொகை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள், தனியார் பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்து 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர் என, மொத்தம் 10 பேர், பிளஸ் 1 படிப்பினை தமிழகத்திலுள்ள தலைசிறந்த தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து பயில விரும்பும் பட்சத்தில், அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது. 

உதவி பெறும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு உயர்ந்தபட்சமாக ஆண்டு ஒன்றிக்கு ரூ.28 ஆயிரம் மிகாமல், இரண்டாண்டுகளுக்கு ரூ.56 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். கல்வி கட்டணம் ரூ.8 ஆயிரம், பராமரிப்பு கட்டணம் ரூ.3,650, விடுதி கட்டணம் ரூ.15,000, சிறப்பு பயிற்சி கட்டணம் ரூ.1,500, மொத்தம் ரூ.28,150 வழங்கப்படும். 
தகுதியுடைய மாணவ, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி