முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, விமானத்தில் இருந்து ஏவப்பட்டு வானில் இலக்கைத் தாக்கக் கூடிய அதிநவீன "அஸ்திரா' ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓ) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "அஸ்திரா' ஏவுகணையை, நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள கடற்படை விமான தளத்தில் சு-30 போர் விமானத்தில் இருந்து விமானப்படை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக ஏவியது' என்று தெரிவித்துள்ளது. இது இந்தியா உருவாக்கியுள்ள முதல் பி.வி.ஆர். ரக ஏவுகணையாகும். அனைத்து தட்பவெப்பச் சூழ்நிலைகளிலும் செலுத்தக் கூடியது இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அந்த அமைப்பின் தலைவர் அவினாஷ் சந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளஆர். அவர் கூறுகையில், ""இந்த ஏவுகணை விரைவில் உண்மையான இலக்கு ஒன்றைத் தாக்குவதற்காக மீண்டும் சோதிக்கப்பட உள்ளது.
அதன் பின் இலகு ரக விமானமான தேஜஸýடன் இணைக்கப்படும். இந்தச் சோதனையானது, விமான-ஏவுகணை ஒருங்கிணைப்பில் மிக முக்கிய வளர்ச்சியாகும்'' என்றார்.