சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!


UPSC சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் கட்டமான Preliminary தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பத்தை www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது: மே 17ம் தேதி முதல், Preliminary தேர்வுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.

Preliminary தேர்வுக்கான விண்ணப்பத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவுடன், நீங்கள் தேர்வெழுத பதிவு செய்யப்படுவீர்கள். அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, தகுதியுடைய நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மே 17ம் தேதி தொடங்கும் விண்ணப்பித்தல் செயல்பாடு, ஜுன் 16ம் தேதி நிறைவடைகிறது. ஆகஸ்ட் 24ம் தேதி தேர்வு நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.அதேசமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அது விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி