முதல் பட்டதாரி சான்று பெறுவதில் இழுபறி - பெரும் கவலையில் மாணவர்கள்

முதல் பட்டதாரி சான்று வழங்க வருவாய்த்துறையினர் இழுத்தடிப்பதால், வரும் 20க்குள் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்களை அனுப்ப முடியாதோ என்ற கலக்கத்தில் மாணவ,மாணவியர் உள்ளனர். பொறியியல் கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவியருக்கான கவுன்சிலிங், வரும் ஜூன் 3ல் சென்னையில் நடக்கிறது. பி.இ. பயிலவிரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் கவுன்சிலிங் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வரும் 20க்குள் அனுப்ப வேண்டும்.இதில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு கல்விசலுகை வழங்குகிறது. கவுன்சிலிங் விண்ணப்பத்துடன் முதல்பட்டதாரி சான்றிதழையும், தேவையானவர்கள் இருப்பிட(நேட்டிவிட்டி) சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களையும் இணைத்துஅனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் பெற்றுள்ளனர். அவர்களில் 60 சதவீதம் பேர் முதல்பட்டதாரிகளாக இருப்பதால், முதல் பட்டதாரி சான்று கோரி வருவாய்த்துறையில் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.வருவாய்த் துறையில் எத்தகைய சான்றிதழ் பெறவும் ஒரு வாரம்வரை அவகாசம் வேண்டியிருக்கும். பெரும்பாலான அதிகாரிகள்ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளதால் சான்று பெறமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் வரும் 20க்குள்விண்ணப்பத்தை அனுப்ப முடியாதோ என்ற அச்சம் மாணவ,மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் பரிந்துரைத்திருந்தாலும், தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்துள்ளன. வழக்கம்போல் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்குகின்றனர். தாராபுரம், காங்கயம்தாலுகாக்களில், நேற்று விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 20ம் தேதிசான்று பெற்றுக்கொள்ளுமாறு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங் விண்ணப்பங்களை 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டியிருப்பதால் முதல் பட்டதாரி சான்று கிடைக்காமல் மாணவ, மாணவியர் கவலை அடைந்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: பி.இ. கவுன்சிலிங் விண்ணப்பம், 20ம் தேதிமாலைக்குள் சென்னையை சென்றடைய வேண்டும். தாசில்தார்உள்ளிட்டோர் தேர்தல் பணியில் இருப்பதால் சான்று வழங்க தாமதம்ஏற்படும் என தாலுகா அலுவலகத்தில் பதில் கூறுகின்றனர்.இக்கட்டான இச்சூழலில் இளைய சமுதாயத்தின் எதிர்காலம்குறித்தும் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். முதல் பட்டதாரி சான்றுமற்றும் நேட்டிவிட்டி சான்று வழங்க ஒவ்வொரு தாலுகாவிலும்இரண்டு துணை தாசில்தார்களை நியமிக்கலாம்.

மாணவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்கும் வகையில் மற்றபணிகளை ஒத்திவைக்க வேண்டும். தேர்தல் பணிக்கு சென்றதுபோகமீதியுள்ள துணை தாசில்தார்களை கொண்டு முதல் பட்டதாரிமற்றும் நேட்டிவிட்டி சான்று வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யவேண்டும். ஏழை, எளிய மாணவர்களின் எதிர்கால நலன் கருதிமாவட்ட நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வரவேண்டும் என்றனர்.

திருப்பூர் வடக்கு தாசில்தார் அஹமதுல்லாவிடம் கேட்டபோது, "திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகாக்களில் அதிக மாணவர்கள் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர். தலைமையிடத்து தனிதாசில்தார்கள் மட்டுமே முதல் பட்டதாரி சான்று வழங்குவர். தேர்தல்பணிக்கு செல்லாதவர்கள் தலைமையிடத்து தனி தாசில்தார்களாக பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று விரைவாக சான்று வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும்" என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி