எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்குநடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும்பள்ளி மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலும்,தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும்26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 30.05.2014 (வெள்ளிக்கிழமை) வரை தேர்வுக்கட்டணம் ரூ.125/-ஐ பணமாக செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மார்ச்/ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதஇறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 30.05.2014 (வெள்ளிக்கிழமை) வரை தேர்வுக்கட்டணம் ரூ.125/-ஐ பணமாக செலுத்தி தங்கள் பெயரைப்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது. தேர்வுக் கட்டணம் தவிர பதிவுக் கட்டணமாக ரூ.50/-ஐ பள்ளியில் செலுத்த வேண்டும்.