ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண்ணை நீட்டிக்க கோரிக்கை ---தின மணி நாளேடு


              தமிழகத்தில் 2013-ஆம் நடைபெற்ற தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களில், இடஒதுக்கீட்டு பிரிவினரின் கோரிக்கையை ஏற்று 60 சதவீத மதிப்பெண்களில் இருந்து, 5 சதவீதம் விலக்கு அளித்தது போன்று, 2012-ஆம் ஆண்டு தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
              இது தொடர்பாக 2012-இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 55 சதவீதம் (82-89) மதிப்பெண் பெற்ற மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சார்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தங்களின் ஆட்சியில் மாணவர்களுக்கு சிறப்பான மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு(டிஇடி) மூலம் பல்லாயிரக்கணக்கான சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது.

              2013-ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்று, 60 சதவீத மதிப்பெண்ணிலிருந்து 5 சதவீதம் விலக்கு அளித்து, 55 சதவீதம் மதிப்பெண்களை சலுகை மதிப்பெண்களாக வழங்கி, ஏராளமானோருக்கு ஆசிரியர் பணி கிடைக்கச் செய்து, அந்தக் குடும்பங்களில் ஒளிஏற்றி வைத்துள்ளீர்கள்.
 
               இதேபோன்று, 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதிதேர்வுக்கும் இச்சலுகை மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த ஆண்டில் தேர்வெழுதிய எங்களுக்கும் 5 சதவீத சலுகை வழங்கி, 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தகுதிச் சான்று மட்டுமாவது, இப்போதைக்கு வழங்கினால், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏற்கெனவே நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பணியை தடையின்றி தொடர்வதற்கு வாய்ப்பாக அமையும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி