மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி அட்மிஷன்

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம், பிபிஏ, பிகாம், பிகாம் (கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்ஸ்), பிஎஸ்சி கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, பிஎஸ்சி ஐ.டி, பிஎஸ்சி (ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் சயின்ஸ்), புட் புரடக்ஷன் (ஓராண்டு படிப்பு) ஆகிய படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பிஏ ஆங்கிலம், பிபிஏ, பிகாம், பிஏ பொருளாதாரம், பிகாம் (கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்ஸ்), பிஎஸ்சி (கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷனஸ்), பிசிஏ, பிஎஸ்சி ஐ.டி ஆகிய பாடப்பிரிவுகளை பிற்பகல் ஷிப்ட் முறையிலும் படிக்கலாம்.

இதேபோல, எம்ஏ டூரிஸம் மேனேஜ்மெண்ட், எம்காம் (ஃபைனான்ஸ்), எம்காம் (கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்ஸ்), எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி), எம்சிஏ, எம்ஏ ஆங்கிலம், எம்பில் வணிகவியல், எம்பில் டூரிஸம் மேனேஜ்மெண்ட் ஆகிய படிப்புகளிலும் எம்காம் (ஃபைனான்ஸ்), எம்காம் (கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்ஸ்), எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி), எம்சிஏ, எம்ஏ ஆங்கிலம், கணிதம், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய மாலை நேர ஷிப்ட் வகுப்புகளிலும் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பக் கட்டணம் ரூ.100. முதுநிலை மற்றும் எம்பில் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பக் கட்டணம் ரூ.500.
இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20-6-2014
எம்பில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30-6-2014
டிப்ளமோ, கிராப்ட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30-6-2014
விவரங்களுக்கு: 0452-2530860

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி