பூக்களை கசக்காதீர்கள்- குழந்தைகள் மன நல ஆலோசகர் கீர்த்தன்யா...
பூ இருக்கிறது
அதனுள் அபரிதமான சக்தியை கொண்ட தேன் இருக்கிறது
அந்த தேனை எடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் உண்டு
ஒன்று அதனை கசக்கி பிழிந்து எடுப்பது ஒரு வழிமுறை
அதே நேரம் பூவிற்கு வலிக்காமல் அதே நேரம் அதன் வளர்ச்சிக்கும் வழிவகுத்தபடி மென்மையாக அமர்ந்து தேனை எடுக்கும் வண்ணத்துபூச்சியின் முறை இரண்டாவது வழிமுறையாகும். இங்கே நான் பூ என்று சொல்வது உங்களது குழந்தைகளைத்தான் நமக்கு இறைவன் தந்த அதி அற்புதமான கொடையான குழந்தைகளை மதிப்பெண் பெறவைப்பது உள்ளீட்ட அவர்களின் பல்வேறு சக்தியினை வெளிக்கொண்டு வர நாம் கையாளும் முறை வண்ணத்து பூச்சியின் குணத்தை கொண்ட மென்னையான,அதே நேரம் உண்மையான , அன்பை ஆதாரமாகக்கொண்ட தோழமையுடன் கூடிய அணுகுமுறையே சிறந்ததாகும்.

அஸ்திவாரம் போட வேண்டிய தருணம்:


அதற்கு குழந்தைகளை புரிந்து கொள்ளவேண்டும். அதிலும் 12 வயதில் இருந்து 18 வயது வரையிலான குழந்தைகளை கவனமாக புரிந்துகொள்ளவேண்டும்.
பொதுத்தேர்வில் கவனம் செலுத்தி தனது எதிர்கால வாழ்க்கைக்கு வலுவான அஸ்திவாரம் போடவேண்டிய வயது இது.

இந்த வயதில்தான் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் ஆனால் இந்த வயதில்தான் படிப்பை தவிர பிற எல்லா விஷயத்திலும் கவனம் செல்லும்.மனசு அலைபாயும்.கையில் எந்த நேரமும் புத்தகம் இருக்கும் ஆனால் படிப்பு வராது.பெற்றோரை எதிர்த்து பேசச்சொல்லும்,உடன் பிறந்தோரிடம் பகைவளர்கச் சொல்லும்,யாரையும் எடுத்தெறிந்து பேசச்சொல்லும்,உறவுகளை புறக்கணிக்கச் செல்லும்,குடும்பத்தை வெறுக்கச் சொல்லும்.

இது பெரும்பாலான டீன் ஏஜ் வயதில் உள்ள ஆண்,பெண் குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் சாதாரண இயல்புதான்.இந்த குணத்தை சரியாக அணுகினால் எளிதில் அகற்றிவிடமுடியும், அதை விட்டுவிட்டு பெற்றோர்களே பெரிதுபடுத்தினால் பிரச்னை பெரிதாகிவிடும். அவர்களது மனதை புரிந்து கொள்ளவேண்டும், அவர்களுக்கு படிப்பதில், பிறருடன் பழகுவதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதைத்தீர்க்க வேண்டும்.

மனதில் விதைக்க வேண்டும்:


அவர்களது கவனத்தை ஒரு முகமாக்க வேண்டும்,பெற்றோர்கள் அவர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை,நம்பிக்கையை அவர்களது மனதின் ஆழத்தில் பதியவைக்கவேண்டும்,பாடங்களை விஞ்ஞான முறைப்படி விளையாட்டாக சந்தோஷமாக சுவராசியமாக படிப்பது எப்படி என்பதை சொல்லித்தர வேண்டும்.
இதைமட்டும் உங்கள் குழந்தைகளிடம் ஆழமாக அழுத்தமாக பதிவு செய்துவிட்டால் போதும், அதன்பிறகு இது நம் குழந்தைதானா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
நான் ஐடி துறையில் உள்ள இளைஞர்களின் மன இறுக்கத்தை குறைத்து அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் முழுநேர மனநல ஆலோசகராக இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை குறிப்பாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மூன்று நாட்கள் முகாம் நடத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதை என் சந்தோஷத்திற்காக,என் விருப்பத்திற்காக,என் ஆத்ம திருப்திக்காக ஒரு ஆரோக்கியமான கல்வி சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற சமூக கடமைக்காக இதை செய்து வருகிறேன்.
3 நாள் முகாம்:


அதிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ படிக்க போகும் மாணவ,மாணவியர் குடும்பத்தில் ஏதோ போருக்கு போவது போன்ற முன்னேற்பாடுகள் எல்லாம் நடக்கும், அப்படிப்பட்ட குழந்தைகளின் பதட்டத்தை தணிப்பது என்பது மிக, மிக முக்கியம்.
இதற்காக நான் நடத்தும் மூன்று நாள் முகாமிற்கு உங்களது குழந்தைகளை அனுப்பிவையுங்கள்.
நீங்கள் அனுப்பும் எந்திரமான குழந்தையை உணர்வும் , உயிரும், உறவும், பாசமும் கொண்ட குழந்தையாக,பயமும் பதட்டமும்  நீங்கப் பெற்ற குழந்தைகயாக,வாழ்க்கையில் தேர்வு பயத்தை வென்ற குழந்தையாக, எதையும் யாரையும் தைரியமாக சந்திக்க துணியும் சவால்கள் நிரம்பிய குழந்தையாக திரும்ப பெறுங்கள்.
இப்படி மாணவ சமூகத்தின் வளர்சிக்காக ஒரு அர்ப்பணிப்புடன் பேசி முடித்த மன நல ஆலோசகர் கீர்த்தண்யாவை பின் நேரில் சந்தித்தபோது குழந்தைகளின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை இன்னும் அதிகமாகவே வெளிப்பட்டது.

புரிதலுக்கான ட்யூன்:


குழந்தைகள்தான் வாழ்க்கை என்று வாழும் பெற்றோர்கள் அதனை சரியாக குழந்தைகளிடம் புரியவைப்பது இல்லை,தனக்காகவே ஒரு தியாக வாழ்க்கை வாழும் பெற்றோரை குழந்தைகளும் சரியாக புரிந்துகொள்வது இல்லை.பரஸ்பரம் இரு தரப்பினருக்குமான புரிதலுக்காக சின்ன 'ட்யூன்தான்' நான் செய்வது என்று சொல்லி சிரிக்கிறார் கீர்த்தண்யா.

தனது மைன்டு பிரஸ் நிறுவனத்தின் சார்பில் பறக்கும் யானைகள் என்ற தலைப்பில் கீர்த்தண்யா நடத்தும் இந்த மூன்று நாள் குழந்தைகளுக்கான முகாம் சென்னையில் வருகின்ற 29, 30,31/5/14 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்.

உணவு சிற்றுண்டியுடன் காலை 8மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் இந்த முகாமிற்கு கட்டணம் உண்டு.இது பற்றி மேலும் விவரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9840927660.,99529 74023.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி