அரசு மௌனம் காப்பது ஏன்?

இன்றைக்கு வீழ்ச்சியில்லா வியாபாரத்தில், கல்வியே முதலிடம் வகிக்கிறது. கல்வி கடைச் சரக்காக மாறியிருக்கும் நிலையில், பணத்தின் எடையே பாடப்பிரிவை தீர்மானிக்கின்றது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் நலிந்தபிரிவினருக்கு 25 சதவிகித ஒதுக்கீடு என் கிற சட்டம் அமலாவதும் தமிழகத்தில் கவலைக் கிடமான நிலையில் இருக்கிறது.தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிந்த பிரிவினருக்கு 25 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றுஅரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அரசின் ஆணையை ஒருபொருட்டாகக் கூட கண்டு கொள்ளவில்லை.


தங்கள் இஷ்டத்திற்கு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. கண் காணிக்க வேண்டிய கல்வித்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் கல்வித்துறை 25 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவது குறித்து, ஆலோசனை நடத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்து. ஆனால், அந்தக் கூட்டங்களில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் பங்கேற்க வில்லை. சில நிர்வாகங்கள் பெயரளவிற்கு அந்த கல்வி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களை அனுப்பி வைத்து கணக்குக் காட்டின. ஒரு சில கல்வி நிறுவனங்கள் போலியான ஆவணங்கள் மூலம் இடஒதுக்கீட்டிற்கு கணக்கு காட்டும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பிட்ட சில நிர்வாகங்கள் நலிந்த பிரிவினருக்கு எங்கள் பள்ளியில் இடமில்லை என கூறுவதையே பள்ளியின் கவுரவமாகக் கருதுகின்ற நிலை நீடிக்கிறது. ஒரு சில பள்ளிகள் மட்டுமே அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு நேர்மையான முறையில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வருகின்றன. ஆனால் அரசின் உத்தரவையே மதிக்காத நிர்வாகங்கள் மீது இதுவரை உறுதியான நடவடிக்கை ஏதும் இல்லை. அப்படியென்றால் அரசுநிர்வாகத்தை விட, அதிக அதிகாரம் படைத்தவர்களா தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள்? அல்லது அரசின் மறைமுக ஆசியுடனே இட ஒதுக் கீட்டிற்கு சவக்குழி தோண்டப்படுகிறதா? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுகிறது.


தாராளமயக் கொள்கையின் விளைவு, கல்விகொடுப்பதை அரசின் பொறுப்பில் இருந்து விடுவிப்பதே நோக்கமாக இருக்கிறது. அதற்கு ஏதுவாக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு திட் டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றன. அதன் ஒருபகுதிதான் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறையின் சார்பில் பத்தாம் வகுப்பில் அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை தனியார் பள்ளிகளில் தள்ளி விடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அதுவும் தனியார் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயில இரண்டு வருடத்திற்கு ரூ.56 ஆயிரத்தை கல்விக் கட்டணமாக அரசே செலுத்துகிறது. அப்படியென்றால் அரசு பள்ளிகள் தரமற்றது என, தனியாருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் செயலாகத்தானே இது அமையும். உண்மையிலேயே நலிந்த பிரிவினருக்கும் அரசு கல்வியளிக்க விரும்புமானால், அரசுபள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாண வர்களுக்கு, அரசு மேல்நிலை பள்ளிகளிலேயே தரமான கல்வி அளித்திட அரசு முன்வர வேண் டும். கல்வி உரிமைச் சட்டத்தை கறாராக அமல்படுத்திட வேண்டும். இட ஒதுக்கீட்டை அமல் படுத்தாத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்திட வேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி