லஞ்சம் வாங்கி பழக்கப்பட்டுவிட்ட ஒரு மனிதன், எல்லாவேலைக்குமே லஞ்சத்தை எதிர்பார்க்கிறான்.
அது ஒரு போதை. எதிலும் பணம் பார்க்காமல் அவனால் ஒருவேலையும்செய்ய முடியாது. தனக்கு பணம் தர ஒவ்வொரு மனிதனும் படுகிறகஷ்டம் அவனுக்கு தெரியாது.
குடி நோயால் பாதிக்கப்பட்டவனின் மனநிலை போன்றதே. பிறர்அடைகிற கஷ்டம் குறித்த தகவல் எனக்கு தேவை இல்லை. எனக்குஎன் சந்தோஷமே முக்கியம்." என்று நினைக்கிற மனநிலை.
இங்கே பாருங்கள். தெருவிளக்குகள் அமைப்பது குறித்து அறிக்கை தயாரிக்க, ஊராட்சி ஒன்றிய தலைவரிடமேயே லஞ்சம் கோரிய அரசுமின் உதவி பொறியாளர்.
இந்த நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட வேண்டியவை இரண்டு.ஒன்று சாதி. மற்றொன்று ஊழல். அதனால் தானோ என்னவோ -ஊழல் செய்து மாட்டி கொண்டாலும் சாதியை சொல்லி தப்பிக்கிறலாவகம் - அரசியல்வாதிகளிடம் உள்ளது.
அரசு பணியை செய்யவே லஞ்சம் கோரிய கதையை பார்ப்போம். பனையூரில், புதிதாக 15 தெருவிளக்குகளை அரசின் 'தாய்' திட்டத்தில் அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக திட்டஅறிக்கை தயாரித்து, மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, அங்குள்ள மின் அலுவலகத்தில் இயங்கும் மின்பகிர்மான உற்பத்தி கழக உதவி பொறியாளர் ராமமூர்த்தியை ஊராட்சி தலைவர் மாயாண்டி அணுகினார். இதற்கு ஆயிரம் ரூபாய்'செலவாகும்' என அவர் தெரிவித்தாராம். 'அரசு வேலைக்கே லஞ்சமா' என 'ஷாக்' ஆன மாயாண்டி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., இசக்கி ஆனந்தனிடம் புகார் செய்தார். காவல்துறையினரின் அறிவுரைப்படி, மின்அலுவலகத்திற்கு சென்று ராமமூர்த்தியிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அதை அவர் பெற்றபோது, டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
"தொகை சிறிது தானே. கோடிக்கணக்கில் அடிக்கிற அரசியல்வாதிகளையும் விட்டு விடுகிறிர்கள். பாவம். "ஐநூறுஆயிரம் அடிக்கிற அப்பாவிகளை பிடிக்கிறிர்கள்" என்று சிலர் லஞ்சம் வாங்கியவர்களுக்கே, லஞ்சம் வாங்காமல் ஆஜராகி பரிந்து பேசுகிறார்கள். உண்மை தான். அரசியல்வாதிகள் தப்பிவிடுகிறார்கள். 'அப்பாவி' அரசு பணியாளர்கள் தான் மாட்டிகொள்கிறார்கள்.
மக்கள் எவரின் ஊழலால் நேரிடையாக பாதிக்கப்படுகிறார்களோ -அவர்கள் மீது தான் எரிச்சல் அடைவார்கள். அந்த எரிச்சலின் வெளிப்பாடே லஞ்ச ஒழிப்புத்துறையின் மீதான புகார்.
நம் ஜனத்தொகை மற்றும் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை ஆகியவற்றோடு, பிடிபடுபவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது - இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறையஉள்ளது.மேலும் அரசியல்வாதிகளின் மீது நேரிடையாக புகாரளித்து, சிறைக்கு அனுப்பக்கூடிய வழி இல்லை என்பதால் அரசியல்வாதிகள் தப்பிக்கிறார்கள்.
கொள்ளையடித்த அரசியல்வாதிகள், வாக்கு கேட்டு சென்றபோது -மக்கள் சீற்றத்துடன் விரட்டியடித்த நிகழ்வையும் பார்த்திருக்கிறோம்.பதிவில் குறிப்பிட்டுள்ள மின் பொறியாளர் - அரசு பணிக்கே கூசாமல்பணம் கேட்கும்போது - சாமானியர்களை எந்தளவு வதைத்திருப்பார்என்பதை புரிந்து கொண்டிருக்கலாம்.
நமக்கு கூட ஒரு வேலை ஆக வேண்டி இருந்தது. இருபது நாளில்முடிக்க வேண்டிய வேலையை மாசக்கணக்கில் இழுத்தடித்தார்.நமக்கு மன உளைச்சலை தந்தார். கைபேசி சுவிட்சையும்அவ்வப்போது ஆப்பில் வைத்திருப்பார். வேலை முடிகிறவரை -பணம் கொடுத்த ஒவ்வொருவரும் வயிற்றில் நெருப்பை கட்டிகொண்டு தான் இருக்க வேண்டும். "என் வயித்தெரிச்சல் சும்மாவிடாது" என்பார்கள் பாமரர்கள்.
பலரை துன்புறுத்தி பெறுகிற பணத்தை கொண்டு ஒருவனால் எப்படிநிம்மதியாக இருக்க முடியும். லஞ்சம் வாங்குகிற எல்லோரும்மாட்டுவது இல்லை என்றாலும் சிக்குகிறவரை மகிழ்ச்சி தான்.