வேலைவாய்ப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் மாணவர்கள் பதிவு

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட முதல் நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்தனர்.

வரும் 30-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவை பள்ளிகளில் மாணவர்கள் செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இத் தேர்வை பள்ளிகளின் மூலம் 8.20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதில் 7.4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பள்ளிகளின் மூலமாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மாநிலம் முழுவதும் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.


மதிப்பெண் சான்றிதழைப் பெற வரும் மாணவர்கள் தங்களது குடும்ப ரேஷன் அட்டை, ஜாதிச் சான்றிதழ், ஏற்கெனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அந்த பதிவு அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பள்ளிக்கு எடுத்துவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்வதற்கு அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஆன்-லைன் பதிவுக்காக தனியாக பாஸ்வேர்டு வழங்கப்பட்டு, மாணவர்களின் கல்வித் தகுதி பதிவு செய்யப்பட்டது.


வரும் 30-ஆம் தேதி வரை பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார். கடந்த ஆண்டு 5 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி