பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள்; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி.

அரசு பள்ளிகளில் பயின்று, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியருக்கு, தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில், மேல்நிலை படிப்பை தொடர்வதற்கு, நிதியுதவி வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பயின்று, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூன்றுமாணவர்கள் மற்றும் மூன்று மாணவியர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சார்ந்த இரண்டு மாணவர், மாணவியர் என, மொத்தம் 10 மாணவ, மாணவியரை தேர்வு செய்து, தமிழகத்தில் அவர்கள் விரும்பும் தலைசிறந்த தனியார் மேல்நிலை பள்ளிகளில் சேர்ந்து, மேல்நிலை கல்விபெற, கல்வித்துறை சார்பில், நிதியுதிவி வழங்கப்படுகிறது.மேலும், இத்திட்டத்தில் உதவிபெறும், மாணவ, மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமானம், ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு, 28 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல், இரண்டு ஆண்டிற்கு, 56 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.மேற்கூறிய தகுதியுடைய மாணவ, மாணவியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, நேரில் சந்தித்து பயன் பெறுமாறு, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி