இந்திய இசை, இசைக்கருவிகள்


இந்த பூமி பல்வகைமை என்னும் இயற்கைச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட எண்ணற்ற பொருட்களின் இருப்பிடமாகும். இந்த வகைமங்களைப் புரிந்து கொள்வதில் மனிதன் காட்டும் ஆர்வமே அறிவுத் தேடல். இந்தத் தேடலே மனிதன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. இந்த தேடலுக்கு துணைபுரிகின்ற வகையிலும் தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையிலும் இந்த அறிவு அரங்கம் பகுதியில் ஒவ்வொரு தலைப்புகள் வாரியாக தொகுத்து வெளியிட்டு வருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.

01. இந்திய இசை:

01. இந்திய இசையின் உற்பத்தி மையமாக கருதப்படுவது - சாமவேதம்.

02. சப்த ஸ்வரங்கள் - ஷ்டஜம்(ச), ரிஷபம்(ரி), காந்தாரம்(க), மத்யமம்(ம), பஞ்சமம்(ப), தைவதம்(த), நிஷாதம்(நி)

03. சுரங்களின் பழந்தமிழ் நூல்கள் - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.

04. கர்நாடக இசையின் அடிப்படை ராகங்கள் - 72

05. கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர் - புரந்தரதாசர் (1480 - 1564).

06. தான்சேன் உருவாக்கியதாகக் கருதபப்டும் இந்துஸ்தானி ராகங்கள் - மியான்கி இயோதி, மியான்கி சாரங், மியான்கி மல்ஹார்.

07. வருடந்தோறும் தஞ்சாவூரில் நடைபெறும் இசை விழா - தியாகராஜ ஆராதனா.

08. ஹம்சத்வனி ராகத்தை உருவாக்கியவர் - ராமசாமி தீட்சிதர்.

09. கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் - சியாமா சாஸ்திரி, தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர்.

10. ஒரு நாளின் அனைத்து பொழுதுகளிலும் பாடலாம் எனக் கருதப்படும் கர்நாடக ராகங்கள் - மோகனன், காம்போதி.

11. பஞ்சரத்ன கூர்த்தனைகளை இயற்றியவர் - தியாகராஜர்.

12. இந்துஸ்தானிய இசையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் - சிதார், சரோட், தம்புரா, பன்சூரி, சேனை, சாரங்கி. சந்தூர் மற்றும் தபலா

13. கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் - வேணு, கொட்டுவடயம், ஆர்மோனியம், வீணை, மிருதங்கம், கஞ்சிரா, கடகம் மற்றும் வயலின்.


02. இந்திய நடன வடிவங்கள்:

01. குச்சிப்புடி நடனத்தின் மற்றொரு பெயர் - பாகவத மேளா நாடகம்.

02. பஞ்சாப் மாநிலத்தின் பிரபலமான நாட்டுப்புற நடனம் - கிட்டா (இது ஆண்கள் ஆடும் பாங்ரா நடனத்தின் பெண் வடிவம்).

03. மிசோராமின் பிரபலமான மூங்கில் நடனம் - செரோ.

04. ஆண்களின் கோலாட்டம் எனப்படும் தமிழக நாட்டுப்புறக்கலை - கழியாட்டம்.

05. உத்தரப் பிரதேசத்தின் பிரபல நடனம் - நெளதாங்கி.

06. வட இந்தியாவின் பிரபலமான நடன வடிவம் - கதக்

07. கர்நாடகத்தின் நாட்டுப்புற நடன வடிவம் - யக்ஷகானா.

08. இசை, பாடல், நடனம், நாடகம் மற்றும் முகபாவங்கள் ஒருங்கிணைந்த கேரள நடனம் - கதக்களி.

09. ஆந்திரமாநிலத்தின் பிரபலமான நடன வடிவம் - குச்சிப்பிடி.

10. குஜராத் மாநிலத்தின் நாட்டுப்புற நடனம் - கார்பா.

11. அசாயும் சிறப்பம் எனப்படும் நடனம் - ஒடிசி

12. ஒடிஷாவின் செவ்வியல் நடன வடிவம் - ஒடிசி

13. சோனால் மான்சிங்கால் பிரபலப்படுத்தப்பட்ட நடனம் - ஒடிசி

14. கேரளத்தின் பிரபலமான நடனம் - கதக்களி (ஆண்கள் மட்டும் ஆடுவது)

15. கேரளத்தில் பெண்களுக்கான ஆடும் நடனம் - மோஹினி ஆட்டம்.

16. மணப்பூரின் நடனம் - மணிபுரி

17. வட இந்தியாவின் பொதுவான நடனம் - கதக் (முகலாயர் காலத்தில் உருவானது)

18. அசாமின் பிரபல நடனம் - சத்ரியா


03. இசைக்கருவிகள்:

01. உலகில் இசைக்கப்படும் எல்ல இசைக் கருவிகளும் அடிப்படையான இசைக்கருவிகள் எல்லாம் கிழக்கு நாடுகளில் தோன்றியன.

02. தமிழகத்தில் இசைக்கருவிகள் நான்கு வகைகள்: அவை 01. தோல்கருவி 02. துளைக்கருவி 03. நரம்புக்கருவி 04. கஞ்சக்கருவி

03. கஞ்சக் கருவி என்பது உயோகக் கருவிகளைக் குறிக்கும்.

04. தோல் கருவிகள் - பேரிகை, படகம், இடுக்கை, உடுக்கை, மத்தளம், சல்லி, கரடி

05. துளைக் கருவிகள் - வங்கியம், கொம்பு, தாரை, குழல், காளம், சங்கு

06. நரம்பு கருவிகள் - யாழ, வீணை, கின்னரி

07. கஞ்சக் கருவிகள் - கைமணி, தாளம், கஞ்சதாளம், கொண்டி

08. பஞ்சமரபு என்ற பண்டைய இசைத்தமிழ் நூல் பாடகர் பாடுவது மிடற்றுக் கருவி எனக் கூறப்படுகிறது.

09. முதல் சங்கத்தில் பெருநாரை, பெருகுருகு (முதுநாரை, முதுகுருகு) என்ற நூல்கள் இருந்தன.

10. பெருநாரை என்பது இசைப்பற்றிய நூல், நரம்பு - நார் - நாரை

11. பெருகுருகு என்பது துணைக்கருவிகள் பற்றிய இசைநூல்

12. இடைச்சங்கத்தில் பேரிசை, சிற்றிசை என்ற இசைநூல்கள் இருந்து வந்தன.

13. கடைச்சங்கத்தில் இசைமரபு, இசை நுணுக்கம், ஐந்தொகை அல்லது பஞ்சமரபு என்னும் நூல்கள் இருந்தன.

14. தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நிகண்டுகள், சைவ, வைணவ நூல்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், உரை நூல்கள் என எல்லாவற்றிலும் இசைத்தமிழ் குறித்த, தமிழ் இசை குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.

15. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞஅச பாரதீயம், பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளவகை ஒத்து என்ற இசை இலக்கண நூல்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

16. ஐந்து திணைக்கும் உரிய "யாழ" குறித்து இலக்கண நூல்கள் கூறுகின்றன.


04. தமிழிசை வரலாறு:

01. "இசையோடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்" என்கிறார் தொல்காப்பியர்.

02. ஒவ்வொரு இனத்திற்கும் உரியதாய் ஓர் இசைமரபு இருக்கும். அந்த வகையில் தமிழுக்கு உரிய இசை மரபு தமிழிசை ஆகும்.

03. பரிபாடல் தூக்கு, வண்ணம் குறித்துக் கூறிகிறது.

04. கலித்தொகையின் தாழிசை இசைப்பாடே

05. பாணரும் கூத்தரும் இசை வளர்த்த கலைஞர்கள் ஆவர்.

06. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக்காதை, கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவரி,

குன்றக்குரவை பகுதிகள் இசைப் பற்றியது.

07. களப்பிரர் காலத்தில் காரைக்கால் அம்மையாரின் திருவண்ணத்தந்தாதி போன்ற பதிகங்கள் இசையுடன் பாடப்பட்டன.

08. பல்லவர் காலத்தில் மூவர் முதலிகள் தமிழ் இசையை நன்கு வளர்த்தனர்.

09. நம்மாழ்வாரின் திருவாய்மொழி இசையை மேலும் வளர்த்தது.

10.முதலாம் மகேந்திரவர்மனின் குடிமியான்மலைக் கல்வெட்டு இசைக் கல்வெட்டு ஆகும்.

11. பெரியபுராணத்தில் ஆனாநாயனார் புராணத்தில் குழலிசை பற்றியும் திருநீலகண்ட அனாரின்
புராணத்தில் யாழ்த்திறம் பற்றியும் குறிப்புகள் உள்ளன.

12. திருவிளையாடல் புராணங்களில் அமைந்துள்ள சாதாரி பாடின திருவிளையாடல் விறகு விற்ற திருவிளையாடல் ஆகிய இசை பற்றியது.

13. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப்பாடல்கள் தாளக் கலைக்கு வேதமாகத் திகழ்கிறது.

14.தமிழிசையும் ஆரிய சங்கீதமும் கலந்து கர்நாடக சங்கீதம் தோன்றியது என்பர்.

15. பண்டைய தமிழிசை கர்நாடக சங்கீதமாக வழங்குகிறது என்று தண்டபாணி தேசிகர் போன்றோர் கருதுகின்றனர்.

16. ராகத்தை முதன்மையாகக் கொண்டது சங்கீதங்கள்

17. சங்கீதத்தோடு பாட்டும் அமைந்தது சாகித்தியங்கள் ஆகும்.

18.சீர்காழியில் பிறந்த முத்துத்தாண்டவர், மாரிமுத்துப்பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் ஆகிய மூவரும் தமிழ் பாடிய தமிழிசை வளர்த்தனர்.

19. இம்மூவரையும் தமிழ் மூவர் என்றும் சீர்காழி மூவர் என்றும் கர்நாடக சஙிகீத ஆதி மும்மூர்த்திகள் என்றும் போற்றுவர்.

20. இம்மூவரே பல்லவி - அனுபல்லவி - சரணம் என்ற அமைப்பில் பாடும் பாடல் மரபைத் தோற்றுவித்தனர். இம்மரபையே பின் வந்த சங்கீத மூர்த்திகள் பின்பற்றினர்.

21. நாயக்கர் காலத்தில் தியாகையர், சியாமாசாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் மூவரும் கீர்த்தனைகள் பாடினர்.

22. ஆபிரகாம் பண்டிதர் "கருணாமிர்த சாகரம்" என்ற நூலை இயற்றினார். வழக்கொழிந்து போன யாழ குறித்து ஆராய்ந்ததோடு யாழ் கருவியை செய்து அதனை மீட்டியும் காட்டினார்.

23. அண்ணாமலை செட்டியார் தமிழிசைச் சங்கம் வைத்துத் தமிழிசையைக் காத்தார்.

24. தண்டபாணி தேசிகர், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் தமிழ் இசைக்குப் பாடுபட்டவர்கள்.


04. கலைஞர்களும் இசைக்கருவிகளும்

01. பண்டிட் ரவிசங்கர் - சிதார்

02. அல்லாஹ ராகா கான் - தபலா

03. ஹரி பிரசாத் செளராசியா - புல்லாங்குழல்

04. உஸ்தாத் பிஸிமில்லா கான் - ஷெனாய்

05. உஸ்தாத் அம்ஜத் அலி கான் - சரோட்

06. குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின்

07. காயத்ரி - வீணை

08. பண்டிட் ஷிவ் குமார் சர்மா - சந்தூர்.

09. உஸ்தாத் சாதிக் அலி கான் - ருத்ர வீணை

10. யு.கே. சிவராமன் - மிருதங்கம்


05. ஓவியர்களும் ஓவியங்களும்:

01. லியோனார்டோ டாவின்சி - கடைசி விருந்து, மோனலிஸா

02. மைக்கேல் ஏஞ்சலோ - தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட், தி கிரியேஷன் ஆஃப் ஆதாம், தி

குரூஸிஃபிகேஷன் ஆஃப் செயிண்ட்பீட்டர், தி ஆன்செஸ்டர்ஸ் ஆஃப் கிரைஸ்ட்

03. வின்சன்ட் வான் கோக் - தி சன் பிளவர், தி ஸ்காரி நைட், தி நைட் கஃபே, தி மோன் ஃபீல்ட்,
ஐரிஸெஸ், பேட்ரியாட் ஆஃப் டாக்டர் காவ்வட்

04. மேரி கஸாட் - கேரேவ் அரேஞ்சிங் ஹர் ஹெயர்

05. எம்.எஃப். ஹூசைன் - சிவ நடராஜ், மதர் தெரசா

06. ராஜா ரவிவர்மா - ஹம்ச தமயந்தி, சீதா சுயம்வரம், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், ராதா மாதவம், விஸ்வாமித்திரரும் மேனகையும்

07. சில்பி - சிம்மாச்சலம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

08. கோபுலு - தஞ்சை பெரிய கோவில்

09. மணியம் செல்வன் - விஷ்ணு, பொன்னியின் செல்வன்

10. நந்தலால் போஸ் - பிரணாம், ஸ்பின்ட், சிவனும் பார்வதியும், கோவினி, உமாவின் தபஸ்

Courtesy : http://thinkgovtjob.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி