வாசகர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...

அன்னையர் தினம் உருவான கதை..



அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண், அன்னா ஜார்விஸ். தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஆனால், அவரின் தாயார் நோய் வாய்ப்பட்டு 1905ம் ஆண்டு மே மாதத்தில் இறந்து விட்டார்.

அன்னா ஜார்விஸ் துடித்தார். தன்னை போலவே மற்றவர்களும் அன்னையின் பெருமைகளை போற்ற வேண்டும் என்று நினைத்து  தேசிய அளவில் 1907ம் ஆண்டு ஓர் இயக்கத்தை தொடங்கினார்.

அதற்கு அமெரிக்காவில் 1911ம் ஆண்டு அங்கீகாரம் கிடைத்தது. அதன்பின் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 1914ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன்.

அவர் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமையை அன்னையர் தினமாக அறிவித்து பெருமைப்படுத்தினார்.

அதன் பின்னர், அகில மெல்லாம் அன்னையர் தினத்தை கொண்டாட ஆரம்பித்தனர்.

அனைத்து வாசகர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி