உலக செஞ்சிலுவை தினம் இன்று - மே - 8



உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே 8ஆம் திகதியை உலக செஞ்சிலுவை தினமாக அனைத்து நாடுகளிலும் 1948ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வரப்படுகின்றது.

முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்ட போது செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது.

இந்த மூன்று நாள் யுத்த நிறுத்தமே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாகக் கொண்டாடப்பட்டு வரப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் செஞ்சிலுவைச் சங்க நாள் எனக் குறிப்பிடப்பட்டு வந்த இந்த நாள், பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்பட்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி