விபத்தில் பேராசிரியர் பலி: ரூ.63 லட்சம் இழப்பீடு : ஐகோர்ட் உத்தரவு

இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற சாத்தூர்பேராசிரியர் விபத்தில் பலியானார். அவரது குடும்பத்திற்கு,இன்சூரன்ஸ் நிறுவனம் 63 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் இழப்பீடுவழங்க வேண்டும்,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சாத்தூர் வெங்கடாஜலபுரத்தை சேர்ந்தபேராசிரியர் ராமசாமி, 46. இவர், 2006 ஜூலை 10 ல் ஒரு இரு சக்கரவாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது, விபத்தில் பலியானார்.இழப்பீடு கோரி அவரது மனைவி தமிழரசி, சிவகாசி மோட்டார்வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், மனு செய்தார்.மனுதாரருக்கு 58 லட்சத்து 81 ஆயிரத்து 652 ரூபாய் இழப்பீடு வழங்க,சிவகாசி தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனிக்கு, தீர்ப்பாயம் 2011 ல்உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அதன் கோட்ட மேலாளர்," ராமசாமி2006 ஜூனில் 29 ஆயிரத்து 320 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.அவருக்கு 6 வது சம்பளக் கமிஷன் பரிந்துரை அடிப்படையில், 2006ஜூன் 1 லிருந்து 49 ஆயிரத்து 710 ரூபாய் சம்பளமாகக் கணக்கிட்டு,இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சம்பளக் கமிஷன் பரிந்துரை 2009 ல்தான் சமர்ப்பிக்கப்பட்டது. தீர்ப்பாய உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்,' என ஐகோர்ட் கிளையில்மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் உத்தரவு: சம்பளக் கமிஷன் பரிந்துரை 2009ல் சமர்ப்பிக்கப்பட்டாலும், 2006 ஜூன் 1 லிருந்து அதாவதுமுன்தேதியிட்டு, அமல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில்,கீழ்கோர்ட் உத்தரவிட்டது சரியே. ராமசாமி உயிருடன் இருந்திருந்தால், ஓய்வு பெறும்வரை 61 லட்சத்து 39 ஆயிரத்து 263ரூபாய் வருவாய் ஈட்டியிருக்க வாய்ப்புள்ளது. கீழ் கோர்ட் உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது. அவரது மரணத்தால் அவரைசார்ந்தவர்களுக்கு இழப்பு மற்றும் கருணை, மருத்துவம், போக்குவரத்துச் செலவாக 63 லட்சத்து 61 ஆயிரத்து 907 ரூபாயை, 7.5சதவீத வட்டியுடன், தமிழரசி குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது, என்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி