தேர்தல் பணியின் போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
சேலத்தில் தேர்தல் பணியாற்றிய போது தலைமை ஆசிரியர் தங்கராஜ் உயிரிழந்தார்.
மேலும், வேலூரில் வாக்குப்பதிவு பணிக்கு சென்ற ஆசிரியை பூங்கொடி ரயில் மோதி உயிரிழந்தார்.
மற்றும் தருமபுரி அருகே பணப்பட்டுவாடாவை தடுக்க சென்ற போலீஸ் கிணற்றில் விழுந்து பலியானார்.
இத்தகவலை சென்னையில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல் அளித்துள்ளார்.