பிளஸ் 2 ரிசல்ட்: தனித் தேர்வர்கள் இன்றே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு டிபிஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் இணைய தளம் வழியாகவும், எஸ்எம்எஸ் மூலமாகவும், அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியல்


பள்ளி மாணவர்கள் தவிர தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் இன்றே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியாகும் இன்றே தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே தனித் தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் பட்டியலை அந்தந்த தேர்வு மையங்களில பெற்றுக் கொள்ள வேண்டும்.

மறுகூட்டல்

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணபிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் தேவையா, அல்லது மதிப்பெண் மறு கூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்கூட்டியே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பிறகே விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.

சிறப்பு துணைத் தேர்வு

மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணபிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதி தேர்வு மையங்களிலும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தாங்கள் தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி