பிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்ததில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் - தி இந்து நாளிதழ் செய்தி


பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்ததில், தனியார் பள்ளிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. வருவாய் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்தவர்களின் விவரம்:

* கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹீப்ரான் பள்ளி மாணவி ஆர்.மிருனாளினி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* நெல்லை மாவட்டத்தில் எஸ்.ஜெ.எஸ்.ஜூப்ளி பள்ளி மாணவி பாலப்பிரியா 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பானுமதி, மரியா சைனி கமலசந்திரிகா, புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாய் குமார் ஆகியோர் 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.

* ராமநாதபுரம் மாவட்டத்தில் சையத் அம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி மில்கச் காட்பெல் 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* சிவகங்கையில் மகரிஷி வித்மன் பள்ளி மாணவர் 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் ராஜபாளையம் பி.ஏ.சி.எம். பள்ளி மாணவர் ஞானவேல்ராஜா 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

* தேனியில் மேரி மாதா மெட்ரிக் பள்ளி மாணவி ரக்‌ஷணா 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

* மதுரையில் சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி மாணவி லலிதா 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* திண்டுக்கல் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* ஊட்டி கிரசெண்ட் பள்ளி மாணவர் முகமது எஸ்ஸார் 1186 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார்.

* திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை ஆர்.ஜி.எம். பள்ளி மாணவி ப்ரீதி 1187 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார்.

* கோவையில் வித்யா விகாஸ் பள்ளி மாணவி மேகலா 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* ஈரோட்டில் ஏ.கே.ஹெச்.என். பள்ளி மாணவர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* சேலத்தில் எஸ்.ஆர்.கே. மெட்ரிக் பள்ளி மாணவர் கந்தநிவராஜ் 1190 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* நாமக்கல் மாவட்டத்தில் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் துளசிராஜன் 1191 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாநிலத்தில் மூன்றாவது இடமும் பிடித்தார்.

* கிருஷ்ணகிரி மாவட்டம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாநிலத்தில் முதல் இடமும் பிடித்தார்.

* தர்மபுரி மாவட்டத்தில் ஸ்ரீவிஜய விடிஎம் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும் மாநிலத்தில் இரண்டாவது இடமும் பிடித்தார்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் வித்யா விகாஸ் பள்ளி மாணவி ஜானகி 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* கரூரில் சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர் எம்.ஜி.பாரதி 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* அரியலூரில் மாண்ட்ஃபோர்டு பள்ளி மாணவர் ஹரிஹரன் 1162 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* பெரம்பலூரில் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் கவின்ராஜ் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

* திருச்சி மாவட்டத்தில் துறையூர் செளடாம்பிகா மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* நாகப்பட்டினத்தில் ராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி தேவ அபிநயா 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பள்ளி முஸ்ரிதா நஸ்ருன் 1177 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

* தஞ்சையில் பி.ஆர்.பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகெடமி பள்ளி மாணவி சரண்யவதி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* திருவண்ணாமலை மாவட்டத்தில் சிஷ்யா மெட்ரிக் பள்ளி மாணவி கார்த்திகா 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* வேலூர் மாவட்டத்தில் சன் பீம் மெட்ரிக் பள்ளி மாணவி ஹேமத் 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி நித்யா 1191 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாநிலத்தில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளார்.

* திருவள்ளூர் மாவட்டத்தில் முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் ரஞ்சித் 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

* சென்னை மாவட்டத்தில் அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி மாணவி என்.ப்ரீதி 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

* புதுச்சேரியில் எஸ்.டி.ஏ. பள்ளி மாணவர் சிவ கணேஷ் 1181 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி