+2 மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாகிறது. தேர்வு முடிவுகள் அனைத்தும் தேர்வுத் துறை இணைய தளங்களிலேயே தெரிந்து கொள்ள வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் 5,884 மேனிலைப் பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 12ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடந்தது. பள்ளி மாணவர்கள் தவிர 1 லட்சம் தனித் தேர்வர்களும் தேர்வு எழுதினர். இது தவிர சிறைகளில் உள்ள 58 கைதிகளும் இந்த தேர்வை எழுதினர். டிஸ்லெக்சியா மற்றும் இதர குறைபாடுகள் உள்ள மாணவர்கள் 1000 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் மார்ச் மாதம் 10ம் தேதியே விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மார்ச் இறுதியில் முடிந்து சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள டேட்டா சென்ட ருக்கு அனுப்பி வைக்கப் பட்டு தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடந்தன. இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை கடந்த மாதமே அறிவித்துவிட்டது. இதையடுத்து நாளை தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் டிபிஐ வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்ககத்தில் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுத் துறை இணைய தளம் மட்டும் அல்லாமல் தனியார் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு தேர்வுத்துறை இணைய தளங்களில் மட்டுமே வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் காலை 10 மணிக்கு மேல் தேர்வுத்துறை இணைய தளத்தில் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள 09282232585 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்பி பெறலாம். முன்னதாக எஸ்எம்எஸ் அனுப்பினால் பெற முடியாது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதேபோல மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி