ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்

கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கைதடைகளை நீக்குவது, குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.மாநிலகணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறியதாவது: 

அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் திறக்கப்படும். இதில் மாற்றம் இல்லை.பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16ல் துவங்கும். மாநிலத்தில் கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி 5சதவீதம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையவில்லை, என்றார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில ்இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் பணிகளைஅவர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில், 2,48,252 பாடப் புத்தகங்கள், 1,82,541 நோட்டுக்கள், 43,775 மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கும்பணி நடக்கிறது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி