பிளஸ் 2 தேர்வு: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார். மேலும் 3ம் இடத்தை இரண்டு மாணவர்கள் பிடித்தனர், நாமக்கல் போதுப்பட்டியைச் சேர்ந்த டி.துளசிராஜன் 1191 பதிப்பேன் பெற்று 3ம் இடம் பெற்றார் மேலும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த எஸ்.நித்யாவும் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தை நாமக்கல் துளசிராஜன், சென்னை நித்யா ஆகிய இரண்டு மாணவர்கள் பிடித்துள்ளனர். 

ப்ளஸ் 2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 14 ஆயிரத்து 211 மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுஷாந்தி 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். ஆங்கிலத்தில் ஓசூரைச் சேர்ந்த பவித்ரா 198 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்தார். 

200க்கு 200!

கணிதம் - 3,882
உயிரியல் 652
வேதியியல் - 1693
இயற்பியல் - 2,710

மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரங்கள்: 

1. ஈரோடு - 97.05%

2. நாமக்கல் - 96.59%

3. விருதுநகர் - 96.12%

4. பெரம்பலூர் - 96.03%

5. தூத்துக்குடி - 95.72%

6. கன்னியாகுமரி - 95.14%

7. கோயமத்தூர் - 94.89%

8. திருநல்வேலி - 94.37%

9. திருச்சி- 94.36%

10. திருப்பூர்- 94.12%

11. சிவகங்கை- 94.06%

12. தருமபுரி- 93.24%

13. ராமநாதபுரம்- 93.06%

14. கரூர்- 92.97%

15. தேனி- 92.73%

16. மதுரை- 92.34%

17. சென்னை- 91.9%

18. சேலம்- 91.53%

19. திண்டுக்கல்- 90.91%

20. தஞ்சாவூர்- 89.78%

21. புதுக்கோட்டை- 89.77%

22. புதுச்சேரி- 89.61%

23. கிருஷ்ணகிரி- 89.37%

24. திருவள்ளூர்- 88.23%

25. காஞ்சிபுரம்- 87.96%

26. நாகப்பட்டினம்- 87.95%

27. ஊட்டி- 86.15%

28. விழுப்புரம்- 85.18%

29. வேலூர்- 85.17%

30. கடலூர்- 84.18%

31. திருவள்ளூர்- 83.7%

32. அரியலூர்- 79.55%

33. திருவண்ணாமலை- 74.4%

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி