கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் பணி நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு.

நாடு முழுவதும் உள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் (இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) பதவிகளில் காலியிடங்களை நிரப்ப கேந்திரீய வித்யாலயா அமைப்பு கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தியது. 

இந்த நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர், பாடப் பிரிவு, நேர்முகத் தேர்வு நாள் ஆகிய விவரங்கள் கேந்திரீய வித்யாலயா இணையதளத்தில் (www.kvsangathan.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் மே 20-ம் தேதி தொடங்கி ஜூன் 5-ம் வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம், பயோடேட்டா, உறுதிமொழி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கேந்திரீய வித்யாலயா அமைப்பின் இணை ஆணையர் (நிர்வாகம்) தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி