பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த 77 ஆயிரம் பேருக்கு சிறப்பு வகுப்பு

பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்த, 77 ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே, ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் எடுக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 9ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், 76,973 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். 8.21 லட்சம் பேர் தேர்வெழுதியதில், 7.44 லட்சம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தோல்வி அடைந்த மாணவர்கள், விரைவில், உடனடித் தேர்வை எழுத உள்ளனர். இவர்கள், உடனடி தேர்வில், தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர்வதற்காக, பள்ளி கல்வித்துறை, புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதன்படி, '77 ஆயிரம் பேருக்கும், அவரவர் படித்த பள்ளிகளிலேயே, ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், கோடை விடுமுறையை ஒட்டி, வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால், எந்த அளவிற்கு, சிறப்பு வகுப்புகள் பயன் தரும் என, தெரியவில்லை

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி