2014ம் ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்வில், ஊத்தங்கரையின் ஸ்ரீவித் மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவி சுஷாந்தி, மொத்தம் 1200க்கு 1193 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இரண்டாமிடத்தை தருமபுரியின் ஸ்ரீ விஜய்வித் மேல்நிலைப் பள்ளியின் அலமேலு என்ற மாணவி, 1192 மதிப்பெண்களுடன் பிடித்துள்ளார்.
மூன்றாமிடத்தை இரண்டு பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். மூன்றாமிடத்திற்கான மதிப்பெண் 1191. நாமக்கல் கிரீன்பார்க் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் துளசி ராஜனும், செங்கல்பட்டு, பிரின்ஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நித்யாவும் மூன்றாமிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்த்து, 2242 மையங்களில், மொத்தம் 8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.
இவர்களில், 3.8 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 4.45 லட்சம் பேர் ஆண்கள். தேர்வு முடிவுகள், மே மாதம் 9ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.