இந்தியாவின் பொக்ரான் அணுகுண்டு சோதனை .. மாபெரும் சாதனை...1998ல் இதே நாளில் நடந்தது...மாபெரும் சாதனைக்கான திட்டங்களும்.... நாடகங்களும்...

இந்நாளையே (மே 11) தேசிய தொழில்நுட்ப நாளாக போற்றுகின்றோம்..


சக்தி நடவடிக்கை  அல்லது பொக்ரான் இரண்டு  என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய ஐந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று மே 111998ஆம் ஆண்டிலும் இரண்டு அதே ஆண்டு மே 13 நாளிலும் வெடிக்கப்பட்டது. இந்த அணுகுண்டு சோதனைகள் இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறுதரப்பட்ட வணிகத்தடைகளை விதிப்பதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அதே ஆண்டு பாக்கித்தான் மே 28 மற்றும் மே 30ஆம் நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாக அமைந்தது.

இந்தியா முதன்முதலாக 18 மே 1974 அன்று சிரிக்கும் புத்தர் என்று குறிக்கப்பட்ட அணுகுண்டு சோதனையை நடத்தியது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு மே 11,1998 அன்று புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஆட்சியிலிருந்த இந்து தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளுக்கு "சக்தி" என்று குறிப்பெயர் வழங்கியிருந்தது. சக்தி என்ற சமசுகிருதப் பெயர் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல்லாகும்.

அந்நாளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும் பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

இந்த நாளை நினைவுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனிநபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.
பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோதுஇந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு செயற்கை கோளாலும் முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா?.

அணுகுண்டைச் சுற்றி வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே. வெங்காயச்சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது...இது நமது பழைய தமிழ் சித்தர்களின் அறிவு...

சரி இனி கதைக்கு வருவோம்....

எப்படி அமெரிக்கா மற்றும் உலகநாடுகளின் கண்ணில் இந்தியா மண்ணைத்தூவி சாதித்தது...

1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group.

எந்த நாடும் இந்தியாவுக்கு உரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அடக்கம்.
1974க்கு முன்வரை நமக்கு ஜெர்மனிஅமெரிக்கா. கனடாபிரான்ஸ்சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் நமக்கு அணு ஆராய்ச்சியி்ல் மிக உதவிகரமாக இருந்தன. ஆனால்அணுகுண்டு சோதனைக்குப் பின் ஒவ்வொரு நாடாக கழன்று கொள்ள அவர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களும் பாதியிலேயே நின்று போயின...

அதன் பிறகு இந்தியா பாதுகாப்பில் அளவுக்கு மீறி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய இந்திய பாதுகாப்பு நிபுணர்களும்அணு விஞ்ஞானிகளும் மீண்டும் ஒரு முறை அணு குண்டு சோதனை நடத்தினால் தான் நமது பலத்தை உண்மையாகவே இவர்கள் புரிந்து கொள்வார்கள். இவர்களது தடைகளால் நாம் ஒன்றும் முடங்கிப் போய்விடவில்லை என்பதை உலகுக்குக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துக் கூறஅவரும் சம்மதித்தார்.

ஆனால்….1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில் ஒரு நாள்..மீண்டும் பொக்ரானில் அணுகுண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவு தீவிரமாக இருக்க மேலே பல நூறு கிமீதூரத்தில் பறந்தபடி அதை அப்படியே லைவ் ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு செயற்கை கோள்கள்.
அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார். மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்தத்தால் அப்போதைக்கு அணுகுண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ்.

மீண்டும் ஒரு சாதனை முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டபடுதல்...

ஆனால் அதற்க்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்ற வாஜ்பாய் பொறுத்தது போதும் என மே மாதம் 1998 இல்  கண்ணசைக்க டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான ஒரு டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது.

இம்முறை அமெரிக்கா உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றி காட்டினர்கள் நம்ம கலாம் & கோ

அப்துல் கலாமுக்குள் இருந்த அணு விஞ்ஞானம் குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்ச் போட்டு ராணுவ இன்ஜினியர்களிடம்  கொடுக்க செய்தது. கலாமுக்குள் இருந்த ராக்கெட் – சாட்டிலைட் விஞ்ஞானம்  அமெரிக்கா செயற்கை கோள்களின்  சுழற்சியை கணித்து கொண்டிருந்தது.

பொக்ரானில்…ஒரு சிறிய நாடகயுத்தி...

அணு விஞ்ஞானி கலாம் தனது குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவர் டாக்டர்.ஆர். சிதம்பரம்.

கலோனல் ப்ரித்விராஜ் என்று சிதம்பரம் அழைக்க கலாம் முதலில் திரும்பி பார்க்க வில்லை. யாரையோ கூப்பிடுகிறார்   என நினைத்து தனது ஸ்கெட்ச் இல் ஆழ்ந்து இருந்தார்.மீண்டும் கலோனல் ப்ரித்விராஜ் என்று சிதம்பரம் அழைக்க கலாம் சட்டென திரும்பி ” அட ஆமா அது நான் தான் இல்ல சொல்லுங்க கலோனல் நடராஜ் ” என்றார் 

சிதம்பரத்திடம். அணுகுண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுக்தி தொடங்கியது இந்த பெயர் மாற்றத்தில் இருந்து தான்.

இந்த முழு சோதனையையும்  மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம் – சிதம்பரம் – இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர். கே.சந்தானம் – பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அணில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர் சூட்டிக் கொண்டனர்.

அந்த வகையில் ப்ரித்வி ஏவுகனை பெயரை சேர்த்து கலாமுக்கு ப்ரித்வி ராஜ் என்று பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நடராஜ் என்று பெயரிட்டார் கலாம்.
அதே போல் சந்தானம் கலோனல் சீனிவாசன் ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக மாமாஜி என்று பெயர் சூட்டினர்.

பாலைவன பகுதியில் தாங்கள் நடத்த போகும் அணுகுண்டு சோதனைக்கு சக்தி என்று பெயர் சூட்டினர்.இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் நாடுகளின் செயற்கை கோள்கள் மற்றும் உளவாளிகள்தொலைப் பேசிகள் மூலம்  ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த கலோனல்கள் பொக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துவதாக தோன்றி இருக்க வேண்டும்.

கலாம் – சிதம்பரம் – டாக்டர். கே. சந்தானம் -  ககோட்கர் டீம் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியானால் சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசியத் திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம்.

மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்தே அப்பகுதியில் அவர்கள் நடமாடினர்.

ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த குழுவை அழைத்து குண்டை போட சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான்.

சட்டென களத்தில்  குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினை உருவாக்கினார்கள்.ராணுவத்தின் Corps of Engineers பிரிவில்  இருந்து  1,000 வீரர்களை தேர்ந்து எடுத்தனர்.விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடை தான்.

அடுத்ததாக கலாம் அமெரிக்கா உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை வைத்து ஒரு டைம்- டேபிள் போட்டார்.இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம். இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலைக் காட்டக் கூடாது. இந்த நேரத்தில் தான் அணு கருவிகள் தாங்கிய ராணுவ வாகனங்கள் புறப்பட வேண்டும்.இந்த நிமிடத்தில் தான் அது பொக்ரானில் நுழைய வேண்டும் .அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும் இதனால் ஹெவி மெசின் கன்கள்ராக்கெட் லாஞ்சர்கள்மார்ட்டர்கள் ஆகியவை வெடித்து ஒரு பக்கம் புழுதியை கிளப்பட்டும் என பல்வேறு ராணுவ உளவு யுக்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.

கலாமின் இந்த டைம் டேபிளின் படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கான  பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன.

கிட்டத் தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள். மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில்கடும் உழைப்பு. மே 10 ஆம்  தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம்.

வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் நேரத்தில் சோதனை நடத்தலாம் என சுதந்திரம் தர மே 11 ஆம் தேதி பிற்பகலில் ஜைசால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து மூன்று முறை குலுங்கியது.

உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெகார்ட் செய்ய உலக நாடுகள் முழுவதுக்கும் தெர்மோ நியுக்ளியர் ஷாக்.! இந்திய சோதனையிட்டது அணு இணைப்பு மூலம் வெடிக்கும் தெர்மோ-நியுக்கிளியர்’ பாம்.

இந்திய மீது போடப் பட்ட முப்பது ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விட வில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.

அடுத்த முப்பது நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.இனி நாமும் அணு ஆயுத நாடு தான்இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி ஏற்காவிட்டாலும் சரி

இந்த சோதனை மூலம் இந்திய மூன்று முக்கிய தகவல்களை அணு உலகுக்கு சொன்னது.

1.யுரேனியத்திலிருந்து ப்ளுடோனியத்தை பிரிப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம்.

2.இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ரஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான்.

3.ஹெவி வாட்டில் இருந்து டிரிடியம் பிரிப்பதும் எங்களுக்கு தெரியும்.

இந்த குண்டு அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது. 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி