இன்றைய தினத்தின் சிறப்புகள்( மே 19)

ஜாம்ஷெட்ஜி டாடா மறைந்த தினம்
நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவரான ஜாம்ஷெட்ஜி டாடா 1904-ம் ஆண்டு இதே நாளில்தான் உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தில் பார்சி குடும்பத்தில் பிறந்த டாடா, தன்னுடைய 29 ஆவது வயதில், வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார்.
மும்பையின் பிரபலமான ஓட்டல் ஒன்றில், இந்தியர் என்பதால் டாடாவுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, மும்பையில் பிரம்மாண்டமாக ஒரு ஓட்டல் கட்ட முடிவெடுத்த டாடா, அதனை 1903-ல் நனவாக்கினார். இந்தியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை அமைக்கப்பட்ட சாக்சி நகர் தற்போது, டாடாவின் நினைவாக ஜாம்ஷெட்பூர் என அழைக்கப்படுகிறது.

மால்கம் எக்ஸ் பிறந்த தினம்
ஆப்ரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பான நேஷன் ஆஃப் இஸ்லாம்(Nation of Islam) அமைப்பின் முக்கியத் தலைவரும், சிறந்த பேச்சாளருமான மால்கம் எக்ஸ் அமெரிக்காவின், நெப்ராஸ்கா மாகாணத்தில் 1925-ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார்.
அமெரிக்காவை உலகம் வியக்கும் வண்ணம் உயர்த்தியவர்கள், ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட கறுப்பர்களே என கூறிய அவர், அடக்கி ஒடுக்கும் வெள்ளையர்களை திருப்பித் தாக்க வேண்டும் என கூறினார். இதனால், எக்ஸ் என்ற எழுத்து புரட்சியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி