சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, இன்று காலை, 10:00 மணிக்கு வெளியானது. இரண்டாம் இடம் 125 பேரும், 321 பேர் மூன்றாம் இடத்தை யும் பிடித்துள்ளனர். மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த தேர்வை, 10.38 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில் வெளியிட்டார்.
பள்ளிகளில், மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவை, மாணவர்கள் அறிவதற்கு வசதியாக, அனைத்துப் பள்ளிகளுக்கும், தேர்வு முடிவுகளை, தேர்வுத் துறை அனுப்பி உள்ளது.