16–வது பாராளுமன்றத்தில் 32 இளம் எம்.பி.க்கள்


புதுடெல்லி, மே. 25 : 
16–வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 315 பேர் புதுமுகங்கள் ஆவார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் 34 பேர் புதுமுக எம்.பி.க்கள் ஆவார்கள். சிவசேனா, பிஜு ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் புது முகங்கள் வெற்றி பெற்று உள்ளனர்.
கடந்த 2 முறையை விட தற்போது பாராளுமன்றத்துக்கு அதிகமான இளம் எம்.பி.க்கள் நுழைந்து உள்ளனர். 35 வயதுக்குட்பட்டவர்களில் 32 எம்.பி.க்கள் உள்ளனர்.

2004–ம் ஆண்டு 23 பேரும் 2009–ம் ஆண்டு 21 பேரும், தேர்வாகி இருந்தனர்.
16–வது பாராளுமன்றத்துக்கு நுழைந்துள்ள இளம் எம்.பி.க்களில் 5 பேருக்கு 26 வயதுதான் ஆகிறது.
தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயவர்த்தன், பா.ஜனதாவைச் சேர்ந்த ரக்ஷா, ஹீனா இந்திய தேசிய லோக் தளத்தைச் சேர்ந்த துஷ்யந்த் சவுதாலா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு 26 வயதுதான் ஆகிறது.
தென்சென்னை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஜெயவர்த்தன் தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை தோற்கடித்தார். டாக்டரான இவர் எம்.டி. படித்து வருகிறார்.
பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ரக்ஷா மராட்டிய மாநிலம் ராவர் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மனிஷ் ஜெயினை வீழ்த்தினார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
மற்றொரு பா.ஜனதா எம்.பி.யான ஹீனா மராட்டிய மாநிலம் நந்தூர் தொகுதியில் இருந்து தேர்வு ஆனார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் மானிக் ரோவை தோற்கடித்தார். திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த அபி ஷேக் பானர்ஜி மேற்கு வங்காள மாநிலம் டயமன்ட் ஹார்பர் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் மார்க்சிஸ்டு வேட்பாளர் அபூலை தோற்கடித்தார்.
இந்திய தேசிய லோக்தளம் எம்.பி.யான துஷ்யந்த் சவுதாலா அரியானா மாநிலம் ஹிசார் தொகுதியில் வெற்றி பெற்றார்.
மற்ற இளம் வயது எம்.பி.க்கள் விவரம் வருமாறு:–
27 வயது: ஸ்ரீகாந்த் ஹிண்டே (சிவசேனா – மராட்டிய மாநிலம் கல்யான் தொகுதியில் வெற்றி பெற்றார். டாக்டரான இவர் எம்.எஸ். படித்து வருகிறார்).
ராம்மோகன் நாயுடு (தெலுங்கு தேசம், ஆந்திர மாநிலம் பிரிகாகுளம் தொகுதியில் தேர்வு பெற்றார். என்ஜினீயரிங் படித்துள்ளார்)
ஆகாஷ் யாதவ் (சமாஜ் வாடி. உ.பி. மாநிலம் பெரோஸாபாத் தொகுதியில் வெற்றி பெற்றார்)
28 வயது: அபரூபா (திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்காள மாநிலம் அரம்பாக் தொகுதியில் வெற்றி பெற்றார். வக்கீலாக இருக்கிறார்)
பிரியங்காசிங் ரவாத் (பா.ஜனதா, உ.பி. மாநிலம் பராபாங்கி தொகுதியில் இருந்து தேர்வு ஆனார். இரட்டை எம்.ஏ. படித்துள்ளார்)
அவினாஷ் ரெட்டி (தெங்கு தேசம், 29 வயது), உமாசரண் (காங்கிரஸ்– 30 வயது).
கவுரவ் ககாய் (காங்கிரஸ்), ராஜேஷ்பாய் (பா.ஜனதா), விஜய்குமார் ஹன்சா (ஜே.எம்.எம்.), பல்கா கமன் (டி.ஆர்.எஸ்.) ஆகியோருக்கு 31 வயதும், சிராத்குமார் பஸ்வான் (லோக் ஜனசக்தி), அனுபம் ஹசாரா (திரிணாமுல் காங்கிரஸ்), தீபக் அதிகாரிதேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), மரகதம் குமாரவேல் (அ.தி.மு.க.) ஆகியோருக்கும் 32 வயதாகிறது.
33 வயது:– பூனம் மகாஜன், அபிஷேக் சிங், சாவித்ரி (பா.ஜனதா), அனுபிரியா பட்டேல் (அப்னா தளம்).
34 வயது: பிரபாகரன் (அ.தி.மு.க.), சகுந்தலா (பிஜு ஜனதா தளம்), சவ்மித்ரா கான் (திரிணாமுல் காங்கிரஸ்), அனுஜாபாலா (பா.ஜனதா).
35 வயது: அர்கா கேசரி (பிஜு ஜனதா தளம்), சந்தோஷ் குஷ்வகா (ஐக்கிய ஜனதா தளம்), சாவித்ரி தாக்கூர்) சவ்தா வினோத் (பா.ஜனதா).

Source : http://www.maalaimalar.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி