கடவுள் பெயரால் 15வது பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி


டெல்லி 26/05/2014 : நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். கடவுள் பெயரால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிபதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் திறந்தவெளி அரங்கில் மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. மோடி பதவியேற்புவிழா நடைபெற்ற குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி பலஅடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 16வது லோக்சபாதேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜககூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து லோக்சபா பாஜக தலைவராக (பிரதமர்) மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி பிரதமராக பதவிஏற்கும் விழா இன்று (திங்கட்கிழமை) டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார் கடவுள் பெயரால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதனையொட்டி குடியரசுத்தலைவர் மாளிகையின் திறந்தவெளிமுற்றத்தில் 4000 பேர் அமர்ந்து பதவியேற்பு நிகழ்வைகாணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரேநேரத்தில் முக்கிய பிரமுகர்கள் கூடியதால் தலைநகர் டெல்லி பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 25,000 போலீஸார், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விமானங்கள் பறக்க தடை குடியரசுதின விழாஅணிவகுப்பின் போது வழங்கப்படுகிற பாதுகாப்பை போன்றதொரு பாதுகாப்பு இவ்விழாவிற்கும் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டுத்தலைவர்கள் பங்கேற்பு மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கன் அதிபர் ஹமீதுகர்ஸாய், மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன்,மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம், பூடான் பிரதமர் லியோன்சென் ஷெரிங் டோப்கய், நேபாள பிரதமர் சுஷில்கொய்ராலா, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா சார்பில்அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் ஷிரீன்ஷர்மீன் சௌத்ரி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி