இன்றைய தினத்தின் சிறப்புகள் (மே 14)

பெரியம்மை தடுப்பூசி அறிமுகம்

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்திய தினம் இன்று. அதிக தொற்றுத்தன்மை கொண்ட வைரோலா கிருமியால் ஏற்படும் பெரியம்மை நோயால், ஏராளமானோர் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருந்தனர். மருத்துவப் பட்டம் பெற்ற எட்வர்ட் ஜென்னர், பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார். அந்த ஆராய்ச்சிக்கு 1796-ம் ஆண்டு இதே நாள் வெற்றி கிடைத்தது.

வார்சா ஒப்பந்தம் கையெழுத்தான தினம்
1955-ல் வார்சா ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின், முதலாளித்துவக் கொள்கைகளைப் பின்பற்றிய நாடுகள் அமெரிக்கா தலைமையிலும், கம்யூனிசக் கொள்கைகளைப் பின்பற்றிய நாடுகள் சோவியத் தலைமையிலும் செயல்படத் தொடங்கின.
1949-ல் கையெழுத்தான நேட்டோ ஒப்பந்தத்தின் மூலம், ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டன. இதற்கு எதிராக, சோவியத் ஒன்றியமும், கம்யூனிசக் கொள்கைகளைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் போலந்து தலைநகர் வார்சாவில், 1955-ம் ஆண்டு இதே நாளில் தங்களுக்குள் பாதுகாப்பை வலுப்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்ட தினம் இன்று.
அஸ்வான் அணை கட்டத் தொடங்கிய தினம்
அஸ்வான் அணையைக் கட்ட, நைல் நதியை திசை திருப்பும் பணிகள் தொடங்கிய தினம் இன்று. 1964-ல் எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர் மற்றும் சோவியத் அதிபர் குருச்சேவ் கூட்டாக இப்பணியைத் தொடங்கினர். அணையைக் கட்ட உதவி செய்வதாகக் கூறிய அமெரிக்கா பின்னர் மறுத்ததால், சோவியத் ஒத்துழைப்புடன் அணை கட்டி முடிக்கப்பட்டது. சோவியத் அதிபர் குருச்சேவ், இந்த அணையை 8-வது உலக அதிசயமாக அறிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி