இன்றைய தினத்தின் சிறப்புகள் ( மே 13)

செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட தினம்

1648-ல் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட தினம் இன்று. 1638-ம் ஆண்டு வரை முகலாயர்களின் தலைநகராக ஆக்ரா இருந்து வந்த நிலையில், முகலாயப் பேரரசர் ஷாஜகான் பதவியேற்றதும், யமுனை நதிக்கரையில், ஷாஜகானாபாத் என்ற புதிய தலைநகரை நிர்மாணித்தார்.
தற்போதைய வடக்கு டெல்லியில் நிர்மாணிக்கப்பட்ட அந்த நகரில்தான், செங்கோட்டை கட்டப்பட்டது. 1639-ல் தொடங்கப்பட்ட செங்கோட்டை கட்டுமானப்பணி, 9 வருடங்கள் நடைபெற்று 1948-ம் ஆண்டு இதே நாளில்தான் முடிவடைந்தது. யுனெஸ்கோ அமைப்பு செங்கோட்டையை உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.

பொக்ரான் அணுகுண்டு சோதனை

1998-ல் ஆப்ரேஷன் சக்தி 98 மூலம், பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட தினம் இன்று. மே 11-ம் தேதி முதற்கட்டமாக 3 அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பின்னர், இதே நாளில் இரண்டாம் கட்டமாக, மேலும் 2 அணுகுண்டு சோதனைகள் பொக்ரானில் நிகழ்த்தப்பட்டன.
இச்சோதனைகளில் அப்துல் கலாம், இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் ஆர். சிதம்பரம், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய இயக்குனர் அனில் ககோட்கர் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

ஆர்.கே.நாராயண் இறந்த தினம்

தன்னுடைய எழுத்துக்கள் மூலம் மால்குடி கற்பனை கிராமத்திற்கு வாசகர்களை அழைத்துச் சென்ற மந்திர எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் உயிரிழந்த தினம் இன்று. தன்னுடைய முதல் நாவலான ஸ்வாமி அன்ட் ப்ரண்ட்ஸ் மூலம், மால்குடியை அறிமுகப்படுத்திய நாராயண், தி பேச்சுலர் ஆஃப் ஆர்ட்ஸ், தி டார்க் ரூம், வெய்ட்டிங் பார் தி மஹாத்மா, தி மேன் ஈட்டர் ஆப் மால்குடி போன்ற பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

மால்குடி கற்பனை கிராமத்தைத் தழுவி நாராயண் எழுதிய தி கைடு நாவலுக்கு இந்திய அரசின் சாஹித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. பத்ம பூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்ற ஆர்.கே.நாராயண் கடந்த 2001-ம் ஆண்டின் இதே நாளில்தான் உயிரிழந்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி