தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் கிரேடு 1 ஆக தரம் உயர்வு.

தமிழகத்தில் 13 அரசுக் கலைக்கல்லூரிகள் கிரேடு 1 அந்தஸ்துக்கு தரம்உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 7 பிஎட் அரசுக் கல்லூரிகள் மற்றும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட மேலும் 12 அரசுக் கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தற்போது, 74 அரசு கலைக் கல்லூரிகளும், 7 பிஎட் அரசுக் கல்லூரிகளும் உள்ளன. இந்தக் கல்லூரிகளின் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, உயர்கல்வி வசதி உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில், கிரேடு 1 மற்றும் கிரேடு 2 என்ற தகுதியை அரசு வழங்கி வருகிறது.ஏற்கனவே 23 கல்லூரிகள் கிரேடு 1 தகுதியை பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு மேலும் 13 கல்லூரிகள் கிரேடு 2ல் இருந்து கிரேடு 1 அந்தஸ்தை பெற்றுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தக்கல்லூரிகள் பட்டியல்வருமாறு: வாலாஜா, குடியாத்தம், விழுப்புரம், கடலூர், விருத்தாச்சலம், அரியலூர்,திருப்பூர் எல்ஆர்ஜி அரசு கல்லூரி, திருப்பூர் சிக்கன்னா கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை, நாமக்கல் பெண்கள் கல்லூரி, சேலம், மன்னார்குடி, சிவகங்கை ஆண்கள் கலைக்கல்லூரி ஆகியவை புதிய கல்வி ஆண்டு முதல் கிரேடு 1 கல்லூரியாக தகுதி உயர்வு பெற்றுள்ளன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி