சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!


2014ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 26ம் தேதி) நண்பகல் வெளியிடப்பட்டன.


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகளை 6 லட்சத்து 3 ஆயிரத்து 64 மாணவர்கள், 4 லட்சத்து 26 ஆயிரத்து 810 மாணவிகள் என மொத்தம் 10 லட்சத்து 29 ஆயிரத்து 874 பேர் எழுதினர். 


இந்நிலையில், இத்தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் சி.பி.எஸ்.இ., (www.cbseresults.nic.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளையொட்டி, மே 27ம் தேதி வரை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதேபோல், பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் மாணவர்களுக்கு ஏதுவாக, தங்களது மாணவர் சேர்க்கையை சற்று ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி