10ம் வகுப்பு தேர்வு முடிவு : BSNL குறுந்தகவலில் பெறலாம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை செல்பேசி குறுந்தகவல் மூலமாக தெரிந்து கொள்ளும் வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் செய்துள்ளது. 53576 என்ற எண்ணுக்கு தங்களது தேர்வு எண்ணை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால், தேர்வு முடிவு வெளியானதும், உங்கள் செல்பேசிக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் அனுப்பும் குறுந்தகவலுக்கு கட்டணம் இல்லை, அதே சமயம்  தேர்வு முடிவுகள் வரும் குறுந்தகவலுக்கு ரூ.3 கட்டணமாக வசூலிக்கப்படும். பிஎஸ்என்எல் மொபைல் எண்ணில் இருந்து உங்கள் தேர்வு எண்ணை பதிவு செய்ய அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.

SSLC <space> Registration Number to 53576

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி