10 / +2 மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம்: அரசுத் தேர்வுகள் இயக்குனர் வேண்டுகோள்

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம் என்று மாணவர்களை அரசுத் தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
அரசுத் தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை மாணாக்கர்கள்  செய்வதாக தெரிய வருகிறது. லேமினேஷன் செய்யும்பொழுது சான்றிதழ்கள் பழுதடைய நேரிடுகிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் திருத்தம் செய்ய நேரிடும் போது லேமினேஷன் செய்திருந்தால் திருத்தம் செய்ய கடினமாக உள்ளது. வெளிநாடு செல்லும் மாணாக்கர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திரை வைக்க லேமினேஷனிலிருந்து சான்றிதழை பிரிக்கும் போது சான்றிதழ் சிதைய நேரிடுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை மாணாக்கர்கள் லேமினேஷன் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.- என்று கூறியுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி