இரட்டைப்பட்ட வழக்கின் உண்மை நிலை - 09.5.2014 அன்று உச்ச நீதி மன்றத்தால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை

மூன்று வருட பட்டபடிப்பு முடித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கினை நடத்துபவர்களின் கருத்து .09.05.2014அன்று மேன்மை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு அன்றைய தினம் UCG மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மாண்புமிகு நீதியரசர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது .

UCG அன்றைய தினம் தனது வாதமாக 10+2+3+1 செல்லத்தக்கது என வாதாடவில்லை UCG தனது Rules & Regulations கூறியுள்ள 10+2+3+1என்பதற்கான விளக்கத்தினையும் அதற்கான ஆவணகளையும் வழக்கு விசாரணையின் போது நாங்கள் வழங்குவோம். இரட்டைப்பட்டம் முடித்தவர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடத்துவது அவர்களின் உரிமை அதில்எவ்வித மாற்று கருத்தும் இல்லை .அவர்கள் படித்த படிப்பு செல்லத்தக்கது என போராடுவது வரவேற்கத்தக்கது .ஆனால் அதேவேலையில் தவறான தகவல்களை வெளியில் பரப்பிவிடகூடாது என்பதற்காகவே இந்த கருத்தை கூறியிருக்கிறோம் .

மூன்று வருட பட்டபடிப்பு படித்தவர்களின் சார்ப்பாக அடுத்து வழக்கு சம்மந்தமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 30.05.2014 அன்று ஒரு கூட்டம் நடைபெற உள்ளது .அதற்கான அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி