
இபிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சந்தாதாரர்கள் 58 வயதை எட்டிய பின் ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்கள் என்றும் அதன்பின் அவர்கள் தங்கள் நிதி பங்களிப்பை தர வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சந்தாதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தனது கள அலுவலர்களை இபிஎஃப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பல சந்தாதாரர்கள் 58 வயது முடிந்த பின்னரும் தொடர்ந்து சந்தா கட்டி வருவது தெரிய வந்த நிலையில் இந்த விளக்கத்தை இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ளது. எனினும் இந்த நடைமுறை இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் வரும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.