JEE - MAIN எழுத்துத் தேர்வு: நுழைவுச்சீட்டு

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.-மெயின்) நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
என்.ஐ.டி., ஐஐடி, ஐ.ஐ.எஸ்.இ.ர். (ஐசர்) போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.இதில், ஜே.இ.இ. முதன்மை எழுத்துத் தேர்வு ஏப்ரல் 6-ஆம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 150 நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.தொடர்ந்து, கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு ஏப்ரல் 9, 11, 12மற்றும் 19-ஆம் தேதிகளில், மொத்தம் 281 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெறும்.இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.jeemain.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் முதலில் அவர்களுடைய கல்வித் தகுதி விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நுழைவுச் சீட்டுகள் தேர்வர்களுக்குநேரடியாக அனுப்பப்படமாட்டாது. நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 8506061072, 8506061073, 8506061075, 8506061076, 8506061077 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது.இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 1.5 லட்சம் இடங்களில் வருபவர்கள் மே 25-ஆம் தேதி நடைபெறும் ஜே.இ.இ. (அட்வான்ஸ்ட்) தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி