உங்கள் Domain Expire ஆகப்போகிறதா? உடனடியாக Renewal செய்துவிடுங்கள்..!

உங்களுடைய வலைப்பூவிற்கு நீங்கள் வாங்கிய Domain ஒரு வருடத்திற்கு மட்டும் செல்லுபடி ஆகும்படி வாங்கியிருப்பீர்கள். அந்த செல்லுபடி ஆகும் தேதி Expire Date முடிந்துவிட்டால் டொமைன் பெயர் காலாவதியாகிவிடும்.
இதுகுறித்து, உங்களுக்கு நினைவுபடுத்த  நீங்கள் எந்த நிறுவனத்தில், டொமைன் பெயர் வாங்கினீர்களோ, அதிலிருந்து நினைவுபடுத்தும் மின்னஞ்சல் வந்திருக்கும்.
உங்களது பணிக்கிடையில் நீங்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், அப்புறம் பார்க்கலாம் என்று அசட்டையாக இருந்துவிடுவீர்கள்.
டொமைனில் எக்ஸ்பயர் டேட் முடியும்வரை விட்டுவிட்டு, பிறகு சாவகாசமாக அதை மீண்டும் புதுப்பிக்க நினைத்தால், அந்த டொமைன் வேறொருவரால் வாங்கிப்பட்டிருப்பது தெரியவரும்.

ஏன் இப்படி?
ஒருவரின் டொமைன் பெயரை மற்றவர்கள் ஏன் வாங்க வேண்டும்?
மிகப்பெரிய காரணம் உள்ளது. அந்த டொமைன் பெயரில் குறைந்த பட்சம் நீங்கள் ஒரு வருடம் பயன்படுத்தியிருப்பீர்கள். அந்த டொமைனிலிருக்கும்போது நீங்கள் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் கூகிள் தேடல் தளத்தில் பதிவாகியிருக்கும். ஒவ்வொரு பதிவும், பதிவிற்கான இணைப்பும் (Post links) கூகிளில் Index ஆகியிருக்கும்.
அடுமட்டுமல்லாமல், பிரபலமான திரட்டிகளில் நீங்கள் இணைத்த பதிவுகளின் இணைப்புகள், நண்பர்கள் அவர்களுடைய தளத்தில் உங்களது வலைப்பதிவிற்கு கொடுத்த இணைப்புகள் என அனைத்தும் அங்கங்கே பதியப்படிருக்கும். இவ்வாறான இணைப்புகளை Backlinks என்று அழைப்பார்கள்.
இவ்வாறு உங்களுடைய டொமைன் பெயரிலிருக்கும் நூற்றுக்கணக்கான (சில நேரங்களில் ஆயிரக்கணக்கில் கூட இருக்கும். அந்தந்த தளங்களின் தன்மையைப் பொறுத்தது.) பேக்லிங்ஸ் அனைத்தும் அங்கங்கே இருக்கும்.
இந்த பேக் லிங்ககளை அழுத்தி, உங்கள் வலைத்தளங்களுக்கு வாசகர்கள் வருகை தருவார்கள். அவ்வாறான இணைப்புகளை, உங்களது டொமைன் எக்ஸ்பயர் ஆன பிறகு அழுத்தினால், புதியதாக உங்களது டொமைனை வாங்கியவர்களின் தளங்களுக்கு அந்த வாசகர்கள் சென்றுவிடுவார்கள்.
இந்த பேக்லிங்ஸ்களுக்காகவும், உங்களுடைய ஒருவருட கால உழைப்பின் பெரும் பகுதியை, உங்களது டொமைனை வாங்குவதன் மூலம் அவர்கள் பெறுகிறார்கள். இதனால் அவர்களது தளங்கள் வெகு விரைவில் பிரபலமடைய வாய்ப்புள்ளது.
மாற்று வழி உள்ளதா?
எக்ஸ்பயர் ஆன டொமைன்ப பெறுவதற்கு மாற்று வழி உண்டா என்றால் அரிதான சில வழிகள் உள்ளன.
முதல் வழி காலவதியான டொமைனை சிறிது காலம் சில நிறுவனங்கள் அப்படியே வைத்திருக்கும். அவற்றைப் புதுபிக்க பத்து மடங்கு தொகையை கேட்பார்கள். உதாரணமாக ஒரு டொமைனை புதுபிக்க 600 ரூபாய் என்றால், உங்களது காலவதியான டொமைனை புதுப்பிக்க 6000 ரூபாய் கட்டச் சொல்வார்கள். (ஒரு சில நிறுவனங்களில் மட்டும் இந்த முறை செயல்படுத்தபடுகிறது)
பெரும்பாலான நிறுவனங்கள், அவர்களே கூட எக்ஸ்பயர் ஆகும் டொமைனின் வேல்யூ – பாப்புலாரிட்டியைப் பொறுத்து, மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள். அல்லது கண்கொத்திப் பாம்புபோல காத்திருக்கும் டொமைன் திருடர்கள் அதை வாங்கி, தங்களுடைய வலைத்தளங்களுக்கு, அல்லது வியாபார நோக்கம் கொண்ட நிறுவனத் வலைத்தளங்களுக்கு பயன்படும் வகையில் அதை Redirect செய்துவிடுவார்கள்.
அவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய தளத்திற்கு வர நினைத்து உங்களுடைய டொமைன் பெயரில் உள்ள இணைப்புகளை அழுத்தும்பொழுது தானாகவே, அவர்கள் உங்களது டொமைன் பெயரில் உருவாக்கி வைத்திருக்கும் வலைத்தளங்களுக்குச் சென்றுவிடும்.
உதாரணமாக ஒரு நாளைக்கு 500 பேர் உங்களது தளத்திற்கு வருவார்களெனில் அந்த இணைப்பின் மூலம் வருபவர்கள் கணிசமாக அவர்களுடைய தளத்திற்கு செல்வார்கள். இதனால் அவர்களின் தற்போதைய தளம் பிரபலமடைய வாய்ப்பு ஏற்படும்.
என்ன இலாபம்?
மிகப்பெரிய இலாபம் அவர்களுக்கு இருக்கிறது. அதாவது உங்களுடைய ஒரு வருடகாலத்திற்கு உழைப்பின் பகுதியை அவர்கள் ஒரு நொடியில் அடைந்துவிடுவார்கள். உழைத்துப் பதிவிட்ட பதிவுகளின் இணைப்புகள் அனைத்தும் அவர்களுக்கே சொந்தமாகிவிடும்.
இதை ஒரு தொழிலாகவே செய்யும் களவாணிகளும் உண்டு. அதாவது நன்றாக பிரபலமடைந்த டொமைன் பெயர் எக்ஸ்பயர் ஆனவுடனேயே அதை வாங்கிவிடுவது.
அதுபோன்று வாசகர்களை வரவழைப்பதால், அந்த பதிய தளமான பிரபலமடையும். வியாபார நோக்கம் கொண்ட, விளம்பரங்களைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் தளங்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றன.

இப்படியும் நடக்கும்
எக்ஸ்பயர் ஆன டொமைனுக்குரிய வெப்சைட்களானது, ஒரு மிகப்பெரிய பள்ளியின் வெப்சைட்டாக இருக்கலாம். ஒரு மீடியமான வியாபார நிறுவனத்தின் வெப்சைட்டாக இருக்கலாம். ஒரு வளரும் நிறுவனத்திற்கான தளமாக இருந்து, அந்த வலைத்த்ளத்திற்கு டொமைன் எக்ஸ்பயர் ஆகியிருக்கலாம்.
எப்படியும் இதுபோன்ற நிறுவனங்கள் மீண்டும் அதே டொமைன் பெயரைப் பெற முயற்சிக்கும். காரணம் அந்த வியாபார நிறுவனம் மிகப்பெரியதாக இருந்து, உலகம் முழுவதும் அந்த தளத்தின் மூலம் விபாபாரம் நடக்க வாய்ப்பு இருக்கும். ஒரு பள்ளியாக இருப்பின் அந்த பள்ளியின் பெயரிலேயே இருக்கும் டொமைன் பெயரை பலரும் பயன்படுத்தியிருப்பார்கள். இதனால் அப்பள்ளியின் பெயரிலேயே அமைந்த அந்த டொமைன் பெயரை மீண்டும் வாங்க முயற்சிக்கும்.
இவ்வாறு அவ்வாறான வெப்சைட்களின் டொமைன் பெயர் பிரபலமான நிறுவனங்களின் பெயராக இருப்பின், எப்படியும் அவர்கள் அதே டொமைனைப் பெற முயற்சிப்பார்கள். அப்படி முயற்சிக்கும்போது, அந்த டொமைனை புதியதாக வாங்கியவரகள் பேரம் பேசி, மீண்டும் அந்த நிறுவனத்திற்கே விற்றுவிடுவார்கள். இதில் நல்ல இலாபம் பார்ப்பார்கள். இதையே தொழிலாக செய்பவர்களும் இருக்கிறார்கள்.
தடுக்க முடியாதா?
இது என்னுடைய டொமைன்.. இவர்கள் பயன்படுத்துகிறார்கள் என தடுக்க முடியாதா என்று கேட்டால், நிச்சயமாக முடியாது. உங்களுக்கு வழங்கப்பட்ட முடிவு தேதிக்குப் பிறகு நீங்கள் அந்த டொமைனை வாங்கிவில்லை என்றால் நிச்சயம் அதைத் தடுக்க முடியாது. அதற்கான விதிமுறைகள் இல்லை.
குறிப்பிட்ட தேதியில் நீங்கள் வாங்காவிட்டாலும் மேலும் சில நாட்கள் உங்களுக்கென நீட்டிப்பார்கள். அந்த தேதியையும் கடந்துவிட்டால் உங்களது டொமைன் உங்களுக்கு இல்லை.
வேறென்ன செய்யலாம்?
அதே பெயரில் வேண்டுமென நினைத்தால், ஓரளவிற்கு அதே பெயரை ஒத்த டொமைன் வாங்கிக்கொள்ளலாம். முடியும் இடத்தில் வலைதளம்.காம் என உங்களது டொமைன் இருந்திருந்தால், வலைத்தளம்.இன், வலைத்தளம்.org போன்று ஏதேனும் ஒரு டொமைன் பெயரை வாங்கலாம்.
ஆனால் மேற்குறிப்பிட்ட இழப்புகளை தவிர்க்கவே முடியாது. நீங்கள் நான்கைந்து வருடமாக சரியாக டொமைனை Renewal செய்திருந்தாலும், இந்த முறை மட்டுமே தவறவிட்டுவிட்டேன் என்று நீங்கள் கூறினாலும், உங்களது நான்கைந்து வருட உழைப்பும், பிறருக்கு மிக எளிதாக சென்றுவிடுகிறது.
எனவேதான் உங்களது டொமைன் எக்ஸ்பயர் ஆகிறதென்றால், உடனடியாக அதை Renewal செய்துவிடுங்கள். உங்களது உழைப்பு மட்டுமல்லாமல், உங்களது வாசகர்கள் ஏமாறமல் உங்களது தளத்திற்கு வந்து படித்துப் பயன்பெறுவார்கள்.
சாதாரண வலைப்பூ முதல், வியாபார , பள்ளி, மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிறுவன வலைத்தளங்கள் என எந்த ஒரு வலைத்தளங்களுக்கும் இதுதான் நிலைமை. எனவே உங்களது டொமைனை நீங்கள் தொடர்ச்சியாக தக்க வைக்க, Domain Expire ஆவதற்கு முன்பு Renewal செய்துவிடுங்கள்.
Source : http://www.tholilnutpam.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி