வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டை வினியோகம் செய்வது எப்படி?

        வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் இணைக்கப்பட்டு உள்ள வாக்காளர் சீட்டுகள், ஒப்புதல் பெற வேண்டிய பதிவேட்டுடன் வழங்கப் படும். இவ்வாறு வழங்கப்படும் வாக்காளர் சீட்டில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தங்களுடைய முழு அசல் கையொப்பத்தை போட்டு, வினியோகம் செய்ய வேண்டும்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் சீட்டை தங்களுடைய வாக் குச்சாவடிக்கு உட்பட்ட பகுதி யில் வினியோகம் செய் யும் விவரத்தை, அரசியல் கட்சி யினரால் நியமனம் செய்யப் பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர் அல்லது வேட் பாளரின் முகவர் ஆகியோர் களுக்கு தெரிவித்து, வாக் காளர் சீட்டை வினியோகம் செய்யும் பணியை மேற் கொள்ள வேண்டும்.


வாக்காளர் சீட்டு வழங்கும் மையம்

மேலும் வாக்காளர் சீட்டை வினியோகம் செய்யும் பணியை பார்வையிட்டதற்கு அடையாளமாக வாக்குச் சாவடி நிலை முகவர் அல்லது வேட்பாளரின் முகவர் ஆகி யோருடைய கையொப் பத்தை ஒப்புதல் பதிவேட்டில் பெற வேண்டும். வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக் காளர் சீட்டை சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் நேரடி யாகவோ அல்லது வாக்காளர் குடும்பத்தில் வாக்குரிமை உள்ள மூத்த உறுப்பினரிடமோ வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் போது வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டதற்கு அத்தாட்சியாக கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகையை பெற வேண்டும்.

வாக்காளர் சீட்டை ஒட்டு மொத்தமாக ஒரே நபரிடம் வினியோகம் செய்யக்கூடாது. வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள் வாக்காளர் சீட்டு களை வினியோகிக்கும் போது பாரபட்சம் இல்லாமல் நடு நிலையாக பணியாற்ற வேண்டும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு வெளியே அமைக்கப்படும் வாக்காளர் சீட்டு வழங்கும் மையம், வாக் காளர்களுக்கு எளிதில் தெரியும் வகையில் அமைக்க வேண்டும். மேலும் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மையத்தில் பெரிய விளம்பர பலகை அமைக்க வேண்டும்.

நகல் எடுக்க கூடாது

வாக்காளர் சீட்டை நகல் எடுத்து வினியோகம் செய்யக்கூடாது. வாக் காளர் சீட்டின் நகலை கொண்டு வரும் வாக்காளர்கள் வாக் களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே வழங்கப்படும் வாக் காளர் சீட்டை பத்திரமாக வைத் திருந்து தேர்தல் நடைபெறும் நாளான வருகிற 24-ந் தேதி வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்லுமாறு வாக் காளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


தேர்தல் பார்வையாளர் களால் நியமனம் செய்யப்படும் நுண்பார்வையாளர்களால் வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணி தணிக்கை செய்யப்படும். தணிக்கையில் குறைபாடுகள் கண்டறியப்பட் டால் உரிய நடவடிக்கை எடுக் கப்படும்.

5 நாட்களுக்கு முன்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வினியோகம் செய்யப்படாத வாக்காளர் சீட்டுகள் மற்றும் ஒப்புதல் பதிவேடு ஆகியவற்றை தேர் தல் முடிந்தவுடன் வாக்காளர் பதிவு அலுவலரிடம் ஒப் படைக்க வேண்டும். வாக் காளர் சீட்டுகளை முறையற்ற வகையில் வினியோகம் செய் தல், முறையற்ற வகையில் வைத்திருத்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்ற மாகும்.

எனவே தேர்தல் ஆணையத் தால் வழங்கப்பட்ட அறிவுரை களை பின்பற்றி வாக்காளர் சீட்டுகளை முறையாக வினி யோகம் செய்ய வேண்டும். வருகிற 24-ந் தேதிக்கு 5 நாட் களுக்கு முன் வாக்காளர் சீட்டை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வேண் டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி