மே மாதத்தில் வருகிறது "ரிசல்ட் வெள்ளி'கள்

மே மாதத்தில், தொடர்ந்து மூன்று வாரமும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமை வெளிவருவது, அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது. 

மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் எதிர்பார்க்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, மே மாதம் 9ம் தேதி, வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதைத் தொடர்ந்து, 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், அடுத்த வெள்ளிக்கிழமையான, 16ம் தேதி, ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, அதற்கடுத்த வெள்ளிக்கிழமையான, 23ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படி, தொடர்ந்து மூன்று வாரங்களும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமையாக அமைந்துள்ளது, பொதுமக்கள் தரப்பில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டு கேட்ட வேட்பாளர்கள் முதல், ஓட்டு போட்ட வாக்காளர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் அடுத்தடுத்த வெள்ளிக்கிழமையை, "ரிசல்ட்' தெரிந்து கொள்ளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி