பருவநிலை மாற்றத்தால் மொத்த உலக நாடுகளும் பாதிப்படையும்: ஐநா எச்சரிக்கை

பருவ நிலை மாற்றத்தால் ஏற்கனவே அனைத்து கண்டங்களும், ஓசேன் மண்டலமும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.இந்த நிலையில், பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த ஐநா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

கடைசியாக 2007-ம் ஆண்டில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையின் பின்னர், தற்போது 7 ஆண்டுகளின் முடிவில் புவி வெப்பமடைதலின் பாதிப்புகள் இரண்டு மடங்குகள் அதிகரித்துள்ளதற்கான ஆதாரங்கள் இந்தப் புதிய ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளன.

காலநிலை மாற்றம் தொடர்பான இந்த அறிக்கையை ஐநா பொதுச்செயாளர் பான்கீமூனும் வரவேற்றுள்ளார். மனித நடவடிக்கைகளின் காரணமாக காலநிலைமாற்றம் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளது. விவசாயம், மனித ஆரோக்கியம், நிலம், கடல் நீர் மற்றும் ஓசோன் மண்டலம் போன்றவை பாதிப்படைந்துள்ளன.

எனவே கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் . எல்லா நாடுகளும் இந்த விவகாரத்தில் விரைவாகவும் தைரியாமாகவும் எல்லா நிலைகளிலும் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி