மே மாதம் முதல் பிஎஸ்என்எல் இன்டர்நெட் வாடகை உயர்வு:

சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வீடுகளுக்கான தொலைபேசியுடன் கூடிய அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவை திட்டங்களுக்கான ஊரக திட்டம் & 500, 950 ஆகியவற்றுக்கான மாதந்திர வாடகை மே 1ம்தேதி முதல் உயர்த்தப்படுகிறது.

மே மாதம் முதல் ஊரக வீட்டு இணைப்பு திட்டம்& 500ன் மாத வாடகை ரூ.500லிருந்து ரூ.550 ஆகவும், வீட்டு இணைப்பு திட்டம்& 950ன் மாத வாடகை ரூ.950ல் இருந்து ரூ.999 ஆகவும் உயர்த்தப்படும்.

ஒரு ஆண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்தினால் 2 திட்டங்களுக்கும் முறையே ரூ.6050, ரூ.10,989 செலுத்தினால் போதும்.
இதுபோல் 2, 3 ஆண்டுகளுக்கான வாடகையை முதலிலேயே செலுத்தினாலும் மொத்தக் கட்டணத்தில் தள்ளுபடி உண்டு. வாடகை உயர்வுடன் இன்டர்நெட் சேவையின் வேகத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி