அண்ணா பல்கலை.யில் எம்.எஸ்சி., எம்.ஃபில். சேர்க்கை அறிவிப்பு



கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி. வளாகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி., எம்.ஃபில். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் www.annauniv.edu இணைய தளம் மூலம் பதிவு செய்து, விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணம் ரூ. 700-க்கான வரைவோலையை இணைத்து "இயக்குநர், மாணவர் சேர்க்கை மையம், அண்ணா பல்கலை, சென்னை - 25' என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 350 செலுத்தினால் போதுமானது.

முக்கியதேதிகள்:
இணைய தளம் மூலம் பதிவு ஆரம்பம்: 28.4.2014 
பதிவு செய்ய கடைசித்தேதி: 26.5.2014 
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசித் தேதி:30.5.2014

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி