தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வசதி

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் போது, எந்த தொகுதியில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள தொகுதிக்குள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, தபால் ஓட்டு வழங்கப்படாது. அதற்கு பதிலாக, தேர்தல் பணிச்சான்று வழங்கப்படும். அதை பயன்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கலாம்.

வேறு தொகுதியில் பணி நியமனம் செய்யப்படுவோர் மட்டும், தபால் ஓட்டு போட வேண்டும். அதற்கான படிவங்கள், இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் நாளில் வழங்கப்படும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி