டிப்ளமோ முடித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Scientific Assistant/ B (Civil) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 11
பணி: Scientist Assistant/B (Civil)
கல்வி தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 15.04.2014 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: Screening Test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு தேவையான சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் (அட்டெஸ்ட் பெற்றது) எடுத்துக் கொண்டு ஸ்கிரீன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி