இடமாறுதல் அறிவிப்பு வெளியிடாததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு இடமாறுதல் அறிவிப்பு வெளியிடாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 தமிழகத்தில், ஆண்டு தோறும் கல்வியாண்டின் இறுதி மாதமான ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறு தல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் பெறப்படுவது வழக்கம்.மே இறுதி வாரத்தில் இதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தலைநகரங் களில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் தனித் தனியாக நடத்தப் பட்டு, மாறுதல் ஆணைகள் வழங்கப்படும். இடமாறுதல் பணி மூப்பு அடிப்படையில் நடத்தப் பட்டு, ஜூன் மாதம் பள்ளி திறக்கும் நாளிலேயே புதிய பள்ளிகளுக்கு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பொறுப் பேற்பர். இதனால், மாறுதல் பெறும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அந்தப் பகுதி யில் உள்ள பள்ளிகளில் சேர்க்க ஏதுவாக இருக்கும். ஆனால், ஏப்ரல் 20-ஆம் தேதி ஆனபோதும், தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் இதுவரை கலந்தாய்வுக்கான அறிவிப் பை வெளியிடவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மே மாதத்திலேயே கலந்தாய்வு நடத்தினால், புதிய இடங்களுக்கு ஆசிரியர்கள் தங்களது குடும்பத்தினரை இடம்பெறச் செய்வது சுலபமாக இருக்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கலந்தாய்வு நடத்துவதால், எங்களது குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பது மிகவும் சிரமம். கல்வித் துறை ஒளிவு மறைவற்ற கலந்தாய்வை நடத்த வேண்டும். அதிகாரிகள் தேர்தலைக் காரணம் காட்டத் தேவையில்லை. தற்போது கலந்தாய்வுக் கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர், வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் கூட கலந்தாய்வை நடத்தலாம் என்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி