மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு, இடமாற்றம், பதவிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் - மத்திய அரசு

மத்திய அரசின் கீழ் செயல்படும், பல துறைகளில், பார்வை இழந்தோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் என, 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக, இட மாற்றம் மற்றும் பதவியமர்த்துதல் போன்ற விஷயங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின், பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு: மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியாற்ற, எந்த துறையில், எந்த பகுதியில், காலியிடங்கள் உள்ளன என்பது கண்டறியப்படும். இவர்களுக்கு, பதவி உயர்வுக்கான பயிற்சி, இடமாற்றம், விடுமுறை அளிப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அவர்கள், பணிபுரியும் அலுவலகங்களின் அருகாமையில், தங்கும் இட வசதிகளை ஏற்பாடு செய்வதிலும் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி